Last Updated:
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த விமானி, இரு பயணிகள் உள்பட 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரேசிலில் ஹோட்டல் மீது விமானம் விழுந்து தீப்பற்றிய கோர சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசிலின் கபோ டா கனோவா (Capao da Canoa) பகுதியில் பறந்து கொண்டு இருந்த ஒற்றை என்ஜின் பொருத்திய சிறிய ரக பயணிகள் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஹோட்டல் மீது விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த விமானி, இரு பயணிகள் உள்பட 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானம் விழுந்த போது ஹோட்டலில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விண்ணை முட்டும் அளவுக்கு புகையுடன் வெளியேறிய தீ அணைக்கப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.


