சார்ப்ருக்கென்: ஜெர்மனியின் சார்ப்ருக்கென் நகரில் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 13-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் டோமா ஜூனியர் போபோவுடன் மோதினார்.
69 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிரண் ஜார்ஜ் 18-21, 21-18, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரமான லக்ஷயா சென் 21-14, 21-11 என்ற நேர் செட் கணக்கில சகநாட்டைச் சேர்ந்த சங்கர் முத்துசாமியை வீழ்த்தி கால இறுதி கற்றுக்கு முன்னேறினார்.

