• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹைதராபாத்துடன் இன்று மோதல்: வெற்றி முனைப்பில் பெங்களூரு அணி! | rcb on the verge of victory Clash with srh today ipl 2025

GenevaTimes by GenevaTimes
May 23, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஹைதராபாத்துடன் இன்று மோதல்: வெற்றி முனைப்பில் பெங்களூரு அணி! | rcb on the verge of victory Clash with srh today ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 12 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 17 புள்ளிகளை பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்ட பெங்களூரு லீக் சுற்றை முதல் இரு இடங்களுக்குள் நிறைவு செய்வதில் முனைப்பு காட்டக்கூடும்.

அந்த அணி 2016-ம் ஆண்டுக்கு பின்னர் லீக் சுற்றை 2-வது இடத்துடன் நிறைவு செய்தது இல்லை. அந்த சீசனில் பெங்களூரு இறுதிப் போட்டி வரை சென்றிருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக ஹைதராபாத் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது. இன்றைய ஆட்டம் உட்பட பெங்களூரு அணிக்கு 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது.

இந்த 2 ஆட்டங்களிலும் பெங்களூரு அணி வெற்றி பெறும் பட்சத்தில் 21 புள்ளிகளுடன் லீக் சுற்றை முதல் இரு இடங்களுடன் நிறை செய்ய வாய்ப்பு உள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற வேண்டியது. ஆனால் மழை காரணமாக இந்த ஆட்டம் லக்னோவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பெங்களூரு அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை குவித்திருந்த நிலையில், கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டிருந்தது. சுமார் 20 நாட்களுக்குப் பிறகு பெங்களூரு அணி களமிறங்கிறது. கடைசியாக அந்த அணி மே 3-ம் தேதி சிஎஸ்கேவுக்கு எதிராக விளையாடி இருந்தது.

நடப்பு சசீசனில் 11 ஆட்டங்களில் 7 அரை சதங்கள் அடித்துள்ள விராட் கோலியிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த மட்டைவீச்சு வெளிப்படக்கூடும். ரஜத் பட்டிதார், டிம் டேவிட், ரோமாரியோ ஷெப்பர்டு ஆகியோரும் அதிரடியில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். பந்துவீச்சில் ஜோஷ் ஹேசில்வுட் இல்லாதது பெங்களூரு அணிக்கு பின்னடைவை கொடுக்கக்கூடும். சுழலில் கிருணல் பாண்டியா, சுயாஷ் சர்மா பலம் சேர்க்கக்கூடும்.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 9 புள்ளிகளை பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. கடைசியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தியிருந்தது.

அந்த ஆட்டத்தில் 20 பந்துகளில் 59 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மாவிடம் இருந்து மேலும் ஒரு அதிரடி ஆட்டம் வெளிப்படக்கூடும். இஷான் கிஷன், ஹன்ரிச் கிளாசன், கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடும். இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று கவுரமான வகையில் தொடரை நிறைவு செய்வதில் ஹைதராபாத் அணி கவனம் செலுத்தக்கூடும்.



Read More

Previous Post

வக்பு திருத்தச் சட்ட வழக்கின் இடைக்கால உத்தரவு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் | Supreme Court reserves verdict on interim order in Waqf amendment act case

Next Post

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

Next Post
தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin