• Login
Tuesday, July 8, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹேசில்வுட் அபார பவுலிங்: மே.இ.தீவுகளை ஊதித்தள்ளி ஆஸி. வெற்றி! | Hazlewood brilliant bowling australia thrashes west indies if first test match

GenevaTimes by GenevaTimes
June 28, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஹேசில்வுட் அபார பவுலிங்: மே.இ.தீவுகளை ஊதித்தள்ளி ஆஸி. வெற்றி! | Hazlewood brilliant bowling australia thrashes west indies if first test match
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் முடிந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

வெற்றி இலக்கான 301 ரன்களை விரட்டக் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி, ஜாஷ் ஹேசில்வுட்டின் 5 விக்கெட்டுகள் ஸ்பெல்லினால் 33.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி கண்டது. முன்னதாக, ஆஸ்திரேலிய அணி, தன் 2-வது இன்னிங்ஸில் 310 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. ஷமார் ஜோசப் அட்டகாசமாக வீசி 5 விக்கெட்டுகளை 87 ரன்களுக்குக் கைப்பற்றினார். ஷமார் ஜோசப் மே.இ. தீவுகளுக்கு ஒரு அரிய பொக்கிஷமாகத் திகழ்கிறார். அவரிடம் ஒரு கபில் தேவ் ஒளிந்திருக்கிறார். இந்த டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷமார் ஜோசப், 2-வது இன்னிங்சில் இறங்கி 22 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 44 ரன்களை விளாசினார். இவர்தான் மே.இ.தீவுகளின் 2வது இன்னிங்ஸில் அதிக ஸ்கோரை எடுத்தவர். முன்னதாக, ஜஸ்டின் கிரீவ்ஸ் 38 ரன்களை எடுத்தார்.

3-ம் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் நேதன் லயன் பந்தில் ஷமார் ஜோசப் கவாஜாவிடம் ஆட்டமிழக்க அடுத்த பந்தே ஜெய்டன் சீல்ஸ் டக் அவுட் ஆக மே.இ.தீவுகள் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் என்று 3-ம் நாளில் களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி விட்ட ஏகப்பட்ட கேட்ச்களில் பயனடைந்த டிராவிஸ் ஹெட் 61 ரன்கள் எடுத்து ஷமார் ஜோசப் வீசிய இன்-ஸ்விங்கர் தாழ்வாக உள்ளே வர பின்னால் சென்று பிளிக் ஆட முயன்று கீழே விழுந்தார், பந்து பின் கால்காப்பில் பட எல்.பி ஆனார். இந்தப் பந்தை ஒன்றும் செய்ய முடியாது, தாழ்வான பந்து.

அவருக்குப் பிறகு பியூ வெப்ஸ்டர் 120 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 63 ரன்களையும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அதிரடி முறையில் 75 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 65 ரன்களையும் எடுத்து இருவரும் சேர்ந்து 102 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். உண்மையில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ரன்கள் என்ற நிலையிலிருந்து ஹெட், வெப்ஸ்டர், கேரியினால் முன்னிலையை மே.இ.தீவுகள் தொட முடியாத இடத்துக்கு எடுத்துச் சென்றது.

பின் வரிசை வீரர்கள் ஸ்டார்க்-16, நேதன் லயன்-13, ஜாஷ் ஹேசில்வுட்-12 என்று பங்களிப்புச் செய்ய ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸில் மீண்டெழுந்து 310 ரன்களை எடுத்தது, ஷமார் ஜோசப் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மே.இ.தீவுகளின் கொலாப்ஸ்: 301 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் முதல் ஓவரிலேயே கிரெய்க் பிராத்வெய்ட் விக்கெட்டை ஸ்டார்க்கிடம் இழந்தது, லூஸ் ஷாட் ஆட ஸ்கொயர் லெக்கில் கோன்ஸ்டாஸ் தாழ்வாக வந்த பந்தை கேட்ச் எடுத்தார். அதன் பிறகு ஜோசப் கேம்பல் ஆக்ரோஷமாக ஆடினார். இதில் ஜாஷ் ஹேசில்வுட் பந்தை ஸ்வீப் ஆடி அசத்தினார். அவர் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுக்க, கேசி கார்ட்டி 20 ரன்கள் எடுத்து ஆடிய போது மே.இ.தீவுகள் அணி கொஞ்சமாவது இலக்கை நோக்கி போராடி முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், டி20 பாணி ஆட்டம் எப்போதும் கைகொடுக்காது. ஜான் கேம்பல் அவுட் ஆனது அப்படித்தான், மீண்டுமொருமுறை ஹேசில்வுட்டை விக்கெட் கீப்பருக்குப் பின்னால் ‘லேப் ஸ்வீப்’ ஆட முயன்று கேரியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த பந்தே பிராண்டன் கிங் மட்டையின் உள் விளிம்பில் பட்ட பந்து கல்லியில் கேமரூன் கிரீன் கையில் கேட்ச் ஆக 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது வெஸ்ட் இண்டீஸ்.

ஹாட்ரிக் வாய்ப்பு: ஹேசில்வுட் ஹாட்ரிக் எடுப்பதற்காக அனைவரும் நெருக்கமாகக் கொண்டு வரப்பட்டனர். ஆனால், ராஸ்டன் சேஸ் அந்தப் பந்தை ஆடாமல் விட்டார். சேஸ் நீண்ட நேரம் தாங்கவில்லை மீண்டும் ஹேசில்வுட் பந்து ஒன்று உள்ளே வர மட்டையின் உள் விளிம்பில் பட்டு ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது. பிறகு கார்ட்டியை அட்டகாசமான பந்தில் பவுல்டு செய்தார் ஹேசில்வுட். பிட்சில் பந்துகள் தாழ்வாக வரத்தொடங்கியதன் பயனை பாட் கம்மின்ஸ் பெற்றார். அவர் ஷேய் ஹோப் விக்கெட்டை தாழ்வான பந்தில் பவுல்டு செய்து வீழ்த்தினார். இந்தப் பந்து ஷேய் ஹோப் மட்டைக்குக் கீழ் சென்றது.

அல்ஜாரி ஜோசப் லபுஷேனின் டைரக்ட் ஹிட்டில் ரன் அவுட் ஆனார். பிறகு ஜோமெல் வாரிக்கனை ஹேசில்வுட் வீழ்த்தி தன் 5-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். ஷமார் ஜோசப் இரண்டு பந்துகளை ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்பி சிக்ஸ் விளாசினார். 22 பந்துகளில் 44 ரன்களை 4 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் விளாசினார். இவரும் ஜெய்டன் சீல்ஸ்டும் அடுத்தடுத்து லயனிடம் விழ மே.இ.தீவுகள் 34-வது ஓவரில் 141 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது. ஆட்ட நாயகன் டிராவிஸ் ஹெட்.



Read More

Previous Post

புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை மீண்டும் தொடக்கம் Odisha

Next Post

தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி – இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது! | Gold price continues to fall Today 440 rupees dips per sovereign

Next Post
தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி – இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது! | Gold price continues to fall Today 440 rupees dips per sovereign

தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி - இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது! | Gold price continues to fall Today 440 rupees dips per sovereign

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin