• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“ஹெல்மெட் இல்லன்னா, பெட்ரோல் இல்லை”…! பிரச்சாரத்தை விரைவில் தொடங்கவுள்ள உ.பி.அரசு… | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“ஹெல்மெட் இல்லன்னா, பெட்ரோல் இல்லை”…! பிரச்சாரத்தை விரைவில் தொடங்கவுள்ள உ.பி.அரசு… | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 28, 2025 7:36 PM IST

இந்தியாவில், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் என இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

Rapid Read
News18News18
News18

உத்தரப்பிரதேச மாநில அரசு விரைவில் ‘No Helmet, No Fuel’ என்ற ஒரு புதிய 1 மாத சாலைப் பாதுகாப்புப் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளது. இதன் கீழ் ஹெல்மெட் அணியாமல் வரும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்க மறுக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தப் பிரச்சாரம் செப்டம்பர் 1 (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வரும், இது அந்த மாத இறுதி வரை நீடிக்கும். இந்தப் பிரச்சாரம் சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதிகளின் (DMs) மேற்பார்வையின் கீழ் மற்றும் மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்படும். மேலும், இது மாநிலக் காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத் துறை உட்பட பல துறைகளால் செயல்படுத்தப்படும்.

உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, இந்தப் பிரச்சாரத்திற்காக முழுமையாக ஒத்துழைக்குமாறு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களும், அனைத்து எரிபொருள் நிலைய ஆப்ரேட்டர்களும் அரசின் இந்த முயற்சிக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

மாநிலப் போக்குவரத்து ஆணையர் பிரஜேஷ் நாராயண் சிங் கூறுகையில், இந்த முயற்சி தண்டனை அல்ல, பாதுகாப்பிற்கான உறுதிமொழி என்றார். இந்த ஒருமாத காலப் பிரச்சாரத்திற்குப் பொதுமக்கள், பெட்ரோல் பங்க் நடத்துபவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டுகோள் விடுத்தார். மேலும், “முதலில் தலைக்கவசம், பின்னர் எரிபொருள்” என்பதை ஒரு விதியாக ஆக்குங்கள். ஏனெனில், தலைக்கவசம் அணிவது உயிர்களைக் காப்பாற்றும் எளிய காப்பீடு” என்றும் கூறினார்.

இந்தியாவில் ஹெல்மெட் அணிவதற்கான விதிகள் என்ன?

இந்தியாவில், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் என இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். 2019ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் (திருத்தம்) சட்டம், நான்கு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளின்படி பாதுகாப்புத் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குகிறது.

இதையும் படிங்க: இந்தியாவின் 10 ஆபத்தான மலைச் சாலைகள்… லிஸ்ட் இதோ…!

ஹெல்மெட் அணியத் தவறினால் அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து (DL) ஆகியவை தண்டனைகளாக இருக்கலாம். அதேநேரம் தலைப்பாகை அணிந்த சீக்கியர்களுக்கு மட்டுமே இதிலிருந்து விதிவிலக்கு. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் மட்டும் 67,000க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன விபத்துகளில் இறந்துள்ளனர், இதில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாமல் விட்டவர்கள் ஆவர். அதோடு உலகில் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் பாதுகாப்பற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா பரவலாகக் கருதப்படுகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 28, 2025 7:36 PM IST

Read More

Previous Post

சிரியா தலைநகர் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் – 6 ராணுவ வீரர்கள் பலி!

Next Post

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு | நெருக்கடியில் இருந்து மீண்டு வருவோம்: ஜவுளித் தொழில் அமைப்பினர் நம்பிக்கை | textile industry says will bounce back from US tariffs

Next Post
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு | நெருக்கடியில் இருந்து மீண்டு வருவோம்: ஜவுளித் தொழில் அமைப்பினர் நம்பிக்கை | textile industry says will bounce back from US tariffs

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு | நெருக்கடியில் இருந்து மீண்டு வருவோம்: ஜவுளித் தொழில் அமைப்பினர் நம்பிக்கை | textile industry says will bounce back from US tariffs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin