2026.09.17 ஆம் திகதி இரவில், கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை விமான நிலையப் பாதைக்கு அருகில், கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 15 கிராம் 55 மில்லிகிராம் ஹெரோயினுடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 6,300,000/- ரூபாய் (அறுபது மூன்று இலட்சம் ரூபா) பணமும் மற்றும் பல பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரும், அதற்கு உடந்தையாகச் செயற்பட்டமை தொடர்பில் பெண் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பணத்தை எண்ணும் மின் இயந்திரம் ஒன்று
- போதைப்பொருளை நிறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சிறிய தராசு ஒன்று
- போதைப்பொருள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்று
- போதைப்பொருள் விற்பனை மூலம் வாங்கிய மோட்டார் சைக்கிள் ஒன்று
சந்தேக நபருக்கு 34 வயதும், பெண் சந்தேக நபருக்கு 26 வயதும் ஆவதுடன், இவர்கள் ஆளுபொமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஆவர்.
சந்தேக நபர் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் நெருங்கிய உறவினர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





