• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஹீரோ எலக்ட்ரிக், ஒகினாவா மற்றும் பென்லிங் இந்தியா மீது நடவடிக்கை! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
May 31, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஹீரோ எலக்ட்ரிக், ஒகினாவா மற்றும் பென்லிங் இந்தியா மீது நடவடிக்கை! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹீரோ எலக்ட்ரிக், ஒகினாவா ஆட்டோடெக் மற்றும் பென்லிங் இந்தியா ஆகிய நிறுவனங்கள் FAME-II திட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை திருப்பி செலுத்தாவிட்டால், எதிர்கால அரசாங்க திட்டங்களில் இருந்து பதிவு நீக்கம் அல்லது தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

2022ம் ஆண்டில் கனரக தொழில்துறை அமைச்சகம் (MHI) பல அசல் உபகரண உற்பத்தியாளர்களால் (OEMs) FAME-II திட்டத்தை மீறுவதாக புகார்களை பெற்றது. இந்த திட்டத்தின் உள்ளூர் மயமாக்கல் தேவைகளை பூர்த்தி செய்யாமல் வாகனங்களை விற்பனை செய்வதாகவும், அறிக்கையின்படி பாகங்களை பெருமளவில் இறக்குமதி செய்வதாகவும் புகார்கள் பெறப்பட்டன.

விளம்பரம்

அமைச்சகம் 13 நிறுவனங்களை விசாரணை செய்து, விதிமுறைகளை மீறியதற்காக ஹீரோ எலக்ட்ரிக், ஒகினாவா ஆட்டோடெக் , Ampere வெஹிகிள்ஸ் ( ₹124.91 கோடி), பென்லிங் இந்தியா, AMO மொபிலிட்டி (₹83 லட்சம்), லோஹியா ஆட்டோ ( ₹11 லட்சம்) உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தது. இந்த ஆறு OEMகளில், AMO மொபிலிட்டி, க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி மற்றும் ரிவோல்ட் ஆகியவை சில மாதங்களுக்குள் வட்டியுடன் மானியங்களை திருப்பி அளித்தன. இருப்பினும், ஹீரோ எலக்ட்ரிக், ஒகினாவா ஆட்டோடெக், மற்றும் பென்லிங் இந்தியா ஆகியவை ஊக்கத்தொகையை திரும்பப் பெறவில்லை. அதனால் அக்டோபர் / நவம்பர் 2023இல் FAMEஇன் கீழ் மானியங்களை பெறுவதில் இருந்து நீக்கப்பட்டன.

விளம்பரம்

அதன் பிறகு, அடுத்த கட்டமாக, ஹீரோ எலக்ட்ரிக் மற்றும் பென்லிங் இந்தியா நிறுவனங்களுக்கு அமைச்சகத்தின் அனைத்து திட்டங்களிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர்கள் நீதிமன்றத்தில் இருந்ததால், ஒகினாவா தடை செய்யப்படவில்லை. அடுத்த கட்டம் இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள அனைத்து திட்டங்களிலிருந்தும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு படிப்படியான செயல் என்பதால் இதுவரை நடக்கவில்லை. மேலும் ஒரு நிறுவனத்தை அமைச்சகங்களின் திட்டங்கள்/கொள்கைகளில் இருந்து விலக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்கிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதை செய்யாவிட்டால் இனி மானியம் இல்லை.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

AMO மொபிலிட்டி, க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி மற்றும் ரிவோல்ட் மோட்டார்ஸ் ஆகியவை FAME-II இன் கீழ் தடையில்லா சான்றிதழைப் பெற்றுள்ளன, ஆனால் அவை எலக்ட்ரிக் மொபிலிட்டி புரமோஷன் ஸ்கீம் (EMPS) 2024இன் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார். எதிர்கால திட்டங்களுக்கு அவர்களை (ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற்ற மூன்று நிறுவனங்கள்) தகுதியுடையவர்களாக மாற்றுவதற்கான செயல்முறை நடந்து வருகிறது. அமைச்சகம் ஒரு குழுவை அமைத்து சில முடிவுகளை எடுத்துள்ளது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், எந்த விவரங்களையும் வெளியிட முடியாது, என்றும் அவர் கூறினார்.

விளம்பரம்

இந்தியாவின் கனரக தொழில்துறை அமைச்சகம் (MHI) மார்ச் 2024ல் எலக்ட்ரிக் மொபிலிட்டி இன்சென்டிவ் ஸ்கீம் (EMPS)ஐ அறிமுகப்படுத்தியது. வணிக நோக்கங்களுக்காக இரண்டு மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதும், தேவையான ஆதரவை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.

நரம்பு பாதிப்பை குணப்படுத்த உதவும் 8 உணவுகள்.!


நரம்பு பாதிப்பை குணப்படுத்த உதவும் 8 உணவுகள்.!

EMPS-2024 நான்கு மாதங்களுக்கு, ஏப்ரல் 2024 முதல் ஜூலை 2024 வரை செயல்படுத்தப்படும். இந்த திட்டம் ரூ.500 கோடி பட்ஜெட்டை கொண்டுள்ளது மற்றும் மின்சார வாகனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது. ஒவ்வொரு மின்சார இருசக்கர வாகனத்திற்கும் ரூ.10,000 வரையிலும், சிறிய மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.25,000 வரையிலும், பெரிய மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.50,000 வரையிலும் மானியம் வழங்கப்படும். இந்த திட்டம் நடப்பாண்டு ஜூலை வரை அமலில் இருக்கும். EV தயாரிப்பாளர்கள் தங்கள் வாகனத்தின் விற்பனையின் அடிப்படையில் மானியங்களை திரும்பப் பெறுவார்கள்.

விளம்பரம்

.

Read More

Previous Post

CSK vs RCB : ஆர்சிபி ரசிகர்களுக்கு இடியாய் இறங்கும் வானிலை தகவல்

Next Post

Lot kedai pusat beli-belah terbakar | Makkal Osai

Next Post
Lot kedai pusat beli-belah terbakar | Makkal Osai

Lot kedai pusat beli-belah terbakar | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin