லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில், ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிமின் மூத்த உதவியாளர் ஒருவரைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் இன்று(09) வியாழக்கிழமை தெரிவித்தள்ளது.
ஹிஸ்புல்லா பொதுச்செயலாளர் நயீம் காசிமின் தனிப்பட்ட செயலாளரும் மருமகனுமான அலி யூசுப் ஹர்ஷியை இராணுவம் கொன்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவிடமிருந்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை
ஹர்ஷியை, காசிமின் “நெருங்கிய கூட்டாளி மற்றும் ஆலோசகர்” என்று இராணுவம் விவரித்ததுடன், அவர் “அவரது அலுவலகத்தை நிர்வகிப்பதிலும் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார்” என்றும் கூறியது.

இந்தக் கூற்று குறித்து ஹிஸ்புல்லாவிடமிருந்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.
250ற்கும் மேற்பட்டோர் பலி
புதன்கிழமை பிற்பகுதியில், தெற்கு பெய்ரூட்டில் உள்ள லைலாகி-கஃபாத் பகுதியில் இஸ்ரேலியப் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும், தலைநகர் முழுவதும் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் லெபனானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பெய்ரூட் உட்பட லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 254 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,165 பேர் காயமடைந்தனர் என்று லெபனான் குடிமைப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
நீண்ட கால அடிப்படையில், மார்ச் 2 முதல் லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,739 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 5,873 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

