Last Updated:
மும்பையில் முகேஷ் அம்பானி குடும்பம் ஹிலாரி கிளிண்டனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தது; சமூக, பெண் கல்வி, கலாச்சாரம் குறித்து விவாதம் நடைபெற்றது.
இந்தியா வந்துள்ள அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி குடும்பம் சிறப்பான வரவேற்பு அளித்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீதா அம்பானி ஆகியோர், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு மும்பையில் உள்ள தங்களது இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இது ஒரு அதிகாரப்பூர்வ அரசியல் கூட்டமாக இல்லாமல், நண்பர்களுக்கு இடையிலான ஒரு சந்திப்பாக அமைந்தது. அம்பானி குடும்பத்திற்கும் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே உள்ள நட்புறவிற்கு இந்தச் சந்திப்பு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தது.
இதில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும் கலந்து கொண்டார். சந்திப்பின்போது உலகளாவிய மாற்றங்கள், பெண் கல்வி, பெண்களுக்கான அதிகாரம் மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து அவர்கள் விரிவாகப் பேசினர்.
அதேபோல் இந்தியப் பாரம்பரியம் மற்றும் கலைகள் மீது இரு தரப்பினருக்கும் இருக்கும் ஆர்வத்தை இந்தச் சந்திப்பு வெளிப்படுத்தியது. நீதா அம்பானி மற்றும் இஷா அம்பானி ஆகியோர் தாங்கள் முன்னெடுத்து வரும் சமூகப் பணிகள் குறித்து விளக்கினர்.
Mrs. Nita and Mr. Mukesh Ambani, along with Ms. Isha Ambani, hosted Secretary Hillary Clinton at their home in Mumbai. The evening was a celebration of friendship, conversations, and a shared love for art and culture. pic.twitter.com/HvSRWgyCU9
— Reliance Industries Limited (@RIL_Updates) February 20, 2026
இந்தச் சந்திப்பு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான சமூக மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்தது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகள் குறித்து ஹிலாரி கிளிண்டன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


