முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு (மேன்முறையீட்டு நிலுவையில் உள்ளது) கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஜூலை 4ஆம் திகதிக்கு திங்கட்கிழமை (01) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிஃபென்டர் வாகனத்தை பயன்படுத்தி இளைஞரை கடத்திச் சென்ற வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.
இந்த பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஜூலை 4ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டப்பட்டது.
தெமட்டகொடையில் டிஃபென்டர் வாகனத்தை பயன்படுத்தி இளைஞரான அமில பிரியங்கரவை கடத்தி, தாக்குதல் நடத்தியதுடன் அச்சுறுத்தல், விடுக்கப்பட்டமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகளில் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றவாளியாக காணப்பட்டார்.
ஹிருணிகா பிரேமச்சந்திர இந்த வழக்கில் ஒன்பதாவது குற்றவாளி, மேலும் அவர் குற்றமற்றவர் என்று ஒப்புக்கொண்டதால் அவருக்கு எதிரான குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

