Last Updated:
கேரளா மாநிலத்தில் பள்ளி ஒன்று ஹிஜாப் தடை விதித்து அது சர்ச்சையான நிலையில், போலீஸ் பாதுகாப்புக்கு அனுமதி அளித்துள்ளது மாநில உயர்நீதிமன்றம்.
இருந்தபோதிலும், அந்தப் பள்ளியில் ஹிஜாப் அணிய தடை இருந்துவருகிறது. இந்நிலையில், ஒரு மாணவி பள்ளிக்கு ஹிஜாப் அணிய விரும்பியுள்ளார். ஆனால், பள்ளியில் ஹிஜாப்க்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதற்கு பள்ளி நிர்வாகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று முறையிட்டுள்ளனர். அப்போது பள்ளி நிர்வாகத்தினருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் சங்கம் கூட்டம் நடத்தப்பட்டு, கடந்த இரு நாள்களாக பள்ளிக்கு விடுமுறை அறிவித்து பதற்றத்தை குறைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டு, அதன்படி பள்ளிக்கு கடந்த இரு நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், பள்ளி நிர்வாகம் தரப்பில் கேரளா உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் வைத்த கோரிக்கையை ஏற்று பள்ளிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து நாளை முதல் அந்தப் பள்ளி காவல்துறையின் பாதுகாப்புடன் செயல்பட இருக்கிறது.
October 14, 2025 7:51 PM IST
ஹிஜாப் தடை! கேரளா பள்ளியில் வெடித்த சர்ச்சை.. போலீஸ் பாதுகாப்போடு பள்ளி செயல்பட நீதிமன்றம் அனுமதி


