ஈரானின் கடுமையான ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக ஈரானிய பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று ஈரானிய பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் தனது ஆடைகளை கழற்றி உள்ளாடைகளுடன் வலம் வந்து ஹிஜாப்புக்கு கட்டுப்பாடுகளுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார் . இச்சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புப் படையினர் அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தியதாக வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் X-தளத்தில் வீடியோவாக வெளியாகி சர்ச்சையானதை தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அமீர் மஹ்ஜோப், “காவல் நிலையத்தில், அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதும், மனநல பாதிப்புடன் இருப்பதும் கண்டறியப்பட்டது” என்று கூறினார்.

