Last Updated:
ஹார்முஸ் நீரிணையை மூடப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து ஈரான்வெளியுறவு இணை அமைச்சர் சயீப் கதீப்சதே விளக்கமளித்துள்ளார்.
ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் நீரிணையை தாங்கள் மூடவில்லை என அந்நாட்டு வெளியுறவு இணை அமைச்சர் சயீப் கதீப்சதே தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கும் ஓமன் நாட்டிற்கும் இடையே உள்ள 100 மைல் நீளமுடைய ஹார்முஸ் நீரிணை, மிக முக்கியமான கடல் வாணிக போக்குவரத்து வழித்தடமாகும். அவ்வழியாக கப்பல்களில் நாள்தோறும் 20 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இது உலகின் மொத்த கச்சா எண்ணெய் தேவைகளில் 5-ல் ஒரு பங்காகும். இந்நிலையில் அதை ஈரான் மூடிவிட்டதாகவும் அதை மீறி எந்தக் கப்பலாவது சென்றால் தாக்கப்படும் என்றும் தகவல் வெளியானதால் அவ்வழியாக எண்ணெய்க் கப்பல்கள் இயக்கப்படவில்லை. இதனால் கச்சா விலை வரலாறு காணாத உயர்வைக் கண்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா வந்துள்ள ஈரானிய அமைச்சர், ஹார்முஸ் நீரிணையை மூடவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையை தாங்களும் சார்ந்திருப்பதாகவும் அதை மூடுவதாக இருந்தால் உரிய அறிவிப்பை வெளியிட்டே நிறுத்துவோம் என்றும் ஈரான் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.


