• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாது”- ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 10, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
“ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாது”- ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 10, 2026 12:42 PM IST

ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலை விட 20 மடங்கு அதிகமாக தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்த நிலையில், புரட்சிகர காவல் படை பதிலடி கொடுத்துள்ளது.

ஹார்மூஸ் ஜலசந்தி
ஹார்மூஸ் ஜலசந்தி

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடர்ந்தால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் புரட்சிகர காவல் படை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் இணைந்து கடந்த 28 ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று அதிகாலையில் பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், 29 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். எட்டு பேர் காயமடைந்தனர்.

ஈராக்கின் குர்திஸ்தான் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் அருகே நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் அந்த பகுதியே தீப்பற்றி எரிந்தது.

இஸ்ரேல் மீதும் ஈரான் ஏவுகணை மழை பொழிந்து வருகிறது. அவற்றை இஸ்ரேல் நடுவானிலேயே இடமறித்து அழித்து வருகிறது. இதுவரை இலகுரக ஏவுகணைகளை ஏவி வந்த நிலையில், இனி ஆயிரம் கிலோ எடையிலான சக்தி வாய்ந்த ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்த உள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது.

சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க விமானப்படைகள் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், அந்நகரே புகை மண்டலம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.

ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலை விட 20 மடங்கு அதிகமாக தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Mar 10, 2026 12:42 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாது”- ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை

Read More

Previous Post

“நாங்கள் பல வழிகளில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை” – Sri Lanka Tamil News

Next Post

‘பெண்கள் ஆண்களை விட புத்திசாலிகள், தொலைநோக்குடன் சிந்திப்பார்கள்’ – ராகுல் காந்தி | Makkal Osai

Next Post
‘பெண்கள் ஆண்களை விட புத்திசாலிகள், தொலைநோக்குடன் சிந்திப்பார்கள்’ – ராகுல் காந்தி | Makkal Osai

‘பெண்கள் ஆண்களை விட புத்திசாலிகள், தொலைநோக்குடன் சிந்திப்பார்கள்’ - ராகுல் காந்தி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin