Last Updated:
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு தரும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு தரத் தயார் என அமெரிக்கா கூறிய நிலையில், ஏவுகணை கொண்டு தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் 25 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. ஈரானின் அறிவிப்பை மீறி, ஹார்முஸ் நீரிணை வழியாக சென்ற எண்ணெய் டேங்கர்கள் மீது ஈரான் புரட்சிகர படை தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும் என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
அதற்கு எதிர்வினையாற்றி உள்ள ஈரான் புரட்சிகர படை, ஹார்முஸ் நீரிணையை அத்துமீறி கடக்கும் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஏவுணை கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.
அதேநேரம், சீனா மற்றும் ரஷ்ய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்க ஈரான் அனுமதித்துள்ளது.

