கொல்கத்தா அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது வெற்றியை தொடர தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியாவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஐபிஎல் திருவிழா அனல் பறந்து வருகிறது. ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதுடன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. ஏற்கனவே பகல் நேரத்தில் விசாகப்பட்டினத்தை வெப்பம் வாட்டி வதைக்கும் சூழலில், இன்றைய ஐபிஎல் போட்டியால் இரவிலும் அனல் பறக்க உள்ளது.
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, தனது முதல் இரு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி பின்னடைவை சந்தித்தது. ஆனால், இதே மைதானத்தில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக டெல்லி அசத்தல் வெற்றிபெற்றது. எனவே, இன்றைய போட்டியிலும் வெற்றியை தொடரை தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக கேப்டன் ரிஷப் பந்து 65 ரன்கள் அடித்தால், 3,000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் இடம்பெறுவதார். எனவே, இந்த மைல் கல்லை அவர் எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேவேளையில், ஐதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் போராடி வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பெங்களூருவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அபார வெற்றிபெற்றது. பேட்டிங், பந்துவீச்சை என அனைத்து துறைகளிலும் அரசு பலத்தில் உள்ள கொல்கத்தா எதிரணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறது. குறிப்பாக அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் தனது அசுரவேக பந்துவீச்சால் எதிரணியினரை கதிகலங்க வைத்து வருகிறார். எனவே, இவரை எதிர்கொள்வதே டெல்லி அணி வீரர்களுக்க கடும் சவால் நிறைந்ததாக இருக்கும்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் டெல்லி – கொல்கத்தா அணிகள் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், டெல்லி 15 போட்டிகளிலும், கொல்கத்தா 16 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளன . ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
