• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் போட்டி சென்னையில் நாளை தொடக்கம் | Hockey India Masters tournament begins in Chennai tomorrow

GenevaTimes by GenevaTimes
June 17, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் போட்டி சென்னையில் நாளை தொடக்கம் | Hockey India Masters tournament begins in Chennai tomorrow
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பை தொடர் நாளை (ஜூன் 18) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்குகிறது. ஹாக்கி இந்தியா சார்பில் நடத்தப்படும் இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் 12 அணிகளும், மகளிர் பிரிவில் 8அணிகளும் கலந்து கொள்கின்றன. மொத்தம் 20 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

ஆடவர் பிரிவில் 12 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும்.

அரை இறுதி ஆட்டங்கள் ஜூன் 25-ம் தேதியும், இறுதிப் போட்டி ஜூன் 27-ம் தேதி நடைபெறுகின்றன. தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் 18-ம் தேதி கேரளாவுடன் மோதுகிறது. தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் 22-ம் தேதி ஆந்திராவை சந்திக்கிறது. தமிழக அணியில் ஒலிம்பியன் ஆடம் சின்க்ளேர், இந்திய ஜூனியர் அணிக்காக முன்னாள் வீரர் முத்துசெல்வன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

மகளிர் பிரிவில் கலந்து கொள்ளும் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அணி ‘பி‘ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதேபிரிவில் ஒடிசா, ஹரியாணா, பஞ்சாப் அணிகளும் உள்ளன. லீக் ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். கால் இறுதி ஆட்டங்கள் ஜூன் 24-ம் தேதியும், அரை இறுதி 26-ம் தேதியும், இறுதிப் போட்டி 27-ம் தேதியும் நடைபெறுகிறது.

தமிழக அணி முதல் ஆட்டத்தில் 19-ம் தேதி ஹரியாணாவையும், 2-வது ஆட்டத்தில் 21-ம் தேதி ஒடிசாவையும், 3-வது ஆட்டத்தில் 23-ம் தேதி பஞ்சாபையும் எதிர்கொள்கிறது. இத்தகவலை நேற்று சென்னையில் நடைபெற்ற பத்ரிகையாளர்கள் சந்திப்பின் போது ஹாக்கி இந்தியா பொருளாளரும், தமிழ்நாடு ஹாக்கி சங்க தலைவருமான சேகர் மனோகரன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஒலிம்பியன் முகமது ரியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Read More

Previous Post

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் அஞ்சலி | Chief Minister Bhupendra Patel pays tribute to former Gujarat Chief Minister Vijay Rupani

Next Post

“பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் இஸ்ரேலை தாக்கும்'' – ஈரான் அதிகாரியின் கூற்றுக்கு பாகிஸ்தான் மறுப்பு!

Next Post
“பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் இஸ்ரேலை தாக்கும்'' – ஈரான் அதிகாரியின் கூற்றுக்கு பாகிஸ்தான் மறுப்பு!

``பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் இஸ்ரேலை தாக்கும்'' - ஈரான் அதிகாரியின் கூற்றுக்கு பாகிஸ்தான் மறுப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin