ஹர்திக் பாண்டியா உடனான விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில், அண்மையில் நடாஷா ஸ்டான்கோவிக் பதிவிட்டுள்ள செல்ஃபி புகைப்படம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவும், நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அகஸ்தியா என்ற ஆண் குழந்தை இருக்கும் நிலையில், தற்போது இந்த தம்பதி விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கெனவே ஹர்திக் பாண்டியா உடனான புகைப்படங்களை நீக்கிய நடாஷா, இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த பாண்டியா என்ற குடும்பப் பெயரையும் நீக்கினார்.
மேலும், கடந்த ஐபிஎல் தொடரின்போது ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக நடாஷா மைதானத்திற்கு வரவில்லை. இதுமட்டுமின்றி, கடந்த மார்ச் 3 ஆம் தேதி நடாஷாவின் பிறந்தநாளன்று கூட ஹர்திக் பாண்டியா எந்த வாழ்த்தையும் சோசியல் மீடியாவில் பகிரவில்லை. இதனால், இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் துணை கேப்டனாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில், நடாஷா அவருடன் செல்லவில்லை. இருப்பினும், மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்து தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இருப்பினும், கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் எந்த புகைப்படத்தையும் பதிவிடாத நடாஷா, தற்போது லிஃப்ட் ஒன்றில் எடுக்கப்பட்ட மகிழ்ச்சியான செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதனுடன், இயேசு கிறிஸ்து ஒரு குழந்தையுடன் தனியாக நடந்து செல்லும் புகைப்படத்தையும் நடாஷா பகிந்துள்ளார். இது தனது மகன் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, நடிகை திஷா படானியின் முன்னாள் காதலரும், உடற்பயிற்சி நிபுணருமான அலெக்சாண்டர் உடன் ரெஸ்டாரண்டில் நடாஷா காணப்பட்டார். அப்போது, அவரிடம் விவாகரத்து குறித்து கேட்டபோது ’நன்றி’ என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார். ஹர்திக் பாண்டியாவும், நடாஷாவும் இதுவரை வெளிப்படையாக எதுவும் கூறாததால், ரசிகர்கள் தொடர்ந்து குழப்பத்திலேயே இருந்து வருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
