• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹரிணியின் பதவி நீக்க விவகாரம்: தமது நிலைப்பாட்டை வெளியிட்ட அரசாங்கம்

GenevaTimes by GenevaTimes
August 13, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹரிணியின் பதவி நீக்க விவகாரம்: தமது நிலைப்பாட்டை வெளியிட்ட அரசாங்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.


கொழும்பில் (Colombo) நேற்று (12) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


அரசியலில் தோல்வியடைந்துள்ளவர்கள் அரசாங்கத்துக்குள் முரண்பாடு என்று போலிய நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதவியில் மாற்றம்



இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முரண்பாடு என்ற அடிப்படையில் பிரதமர் பதவியில் மாற்றம் என்று அரசியலில் தோல்வியடைந்துள்ள உதய கம்மன்பிலதான் (Udaya Gammanpila) குறிப்பிட்டுக் கொள்கின்றார்.

ஹரிணியின் பதவி நீக்க விவகாரம்: தமது நிலைப்பாட்டை வெளியிட்ட அரசாங்கம் | Post Of Prime Minister Of Sri Lanka Controversy



உதய கம்மன்பில தற்போது எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பக்கம் உள்ளதுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் குடிகொண்டுள்ளார்.


இவர் கடந்த காலங்களில் கோட்டபய ராஜபக்சவுடன் ஒன்றிணைந்து செயற்பட்டார், அந்த அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும் தருணத்தில் சூட்சமமான முறையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்பட்டார்.

முன்னுரிமை 



பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்பட்டார், தற்போது எதிர்க்கட்சித் தலைவருடன் ஒன்றிணைந்துள்ளார்.



உதய கம்மன்பில போன்றவர்களை இணைத்துக்கொள்ளும் போது எதிர்க்கட்சித் தலைவர் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

ஹரிணியின் பதவி நீக்க விவகாரம்: தமது நிலைப்பாட்டை வெளியிட்ட அரசாங்கம் | Post Of Prime Minister Of Sri Lanka Controversy

ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியை உருவாக்குவதற்கு அக்கட்சியின் பலர் ஆரம்பத்தில் இருந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள் ஆகவே அவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறோம்.


பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்பதை மக்களுக்கு உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம், அரசியலில் தோல்வியடைந்து தமது அரசியல் கொள்கை என்னவென்பதை கேள்விக்குள்ளாக்கியுள்ளவர்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டுக்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    


நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா

Read More

Previous Post

தீவு விரைவுச் சாலையில் கனரக லாரியுடன் மோதல்.. 22 வயது ஆடவர் மரணம்

Next Post

‘நேர்மையான தேர்தலை அச்சுறுத்தும் வாக்குத்திருட்டு’ திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Next Post
‘நேர்மையான தேர்தலை அச்சுறுத்தும் வாக்குத்திருட்டு’ திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

‘நேர்மையான தேர்தலை அச்சுறுத்தும் வாக்குத்திருட்டு’ திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin