Last Updated:
ஹமாஸ் படையினர் ஆயுதத்தைத் துறக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு காஸாவில் தொடர்ந்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் ராணுவத்திற்கும் – ஹமாஸ் படையினருக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போரால் பாலஸ்தீனத்தில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் தலையிட்டதை அடுத்து காஸா – இஸ்ரேல் இடையே போர் நிறுத்தத்தின் முதல்கட்ட ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில், எட்டு நாட்களுக்குப் பிறகு, அமைதி ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு காஸாவில் உள்ள ராஃபா நகரில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேநேரம் ராஃபா நகரில் தங்கள் ராணுவ வீரர்கள் மீது ஹமாஸ் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கே பதிலடி கொடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் படையினர் ஆயுதத்தைத் துறக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
October 19, 2025 9:39 PM IST
“ஹமாஸ் படையினர் ஆயுதத்தை துறக்கும் வரை போர் நிறுத்தமில்லை” – இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு