மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (14) மாலை முதல் பெய்து வரும் கனமழையால் ஹட்டன் கொழுப்பு பிரதான சாலையில் குயில் வத்தை பகுதியில் பாரிய அளவில் மண் திட்டுகள் சரிந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக ஹட்டன் கொழுப்பு ஹட்டன் கண்டி ஹட்டன் கினிகத்தேன போன்ற அவ்வழியாக செல்லும் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன் வந்து மண் திட்டுகளை இன்று 15 ம் திகதி காலை வேளையில் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


