ஹட்டன் (Hatton) அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் கினிகத்தேனை கடவளை தமிழ் பாடசாலை மாணவர்களைப்
பேருந்தில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நாவலபிட்டியில் இருந்து கினிகத்தனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பாடசாலை மாணவர்களை பேருந்தில் இருந்து வெளியேறுமாறு பேருந்து நடத்துனர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அரச பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட கினிகத்தனை கடவளை விக்னேஸ்வரா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு என இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச்சீட்டினை பேருந்து நடத்துனரிடம் காண்ம்பிக்கும் போது பருவச்சீட்டினை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து வெளியேறுமாறு நடத்துனர் தெரிவிப்பதாக மாணவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நாவலபிட்டியில் இருந்து கினிகத்தனை ஊடாக ஹட்டன் வரை செல்லும் அரச பேருந்தில் அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது அரசபேருந்து நடத்தனரின் சொந்த பேருந்து அல்ல பாடசாலை மாணவர்கலாகிய நாங்கள்
பணம் கொடுத்து பருவச்சீட்டினை பெற்றுள்ளோம் எமக்கு பேருந்தைவிட்டு வெளியேற முடியாது என மாணவர்கள் கேல்வி ஏழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த பேருந்து நடத்துனர் ஆம் இது என்னுடைய பேருந்து நீங்கள் எல்லாம் பேருந்தைவிட்டு இறங்குமாறு வழியுருத்தியதாக வெளியிடப்பட்ட கனோளி ஊடாக தெரியவந்துள்ளது.
தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ந்தும் இது போன்ற அநிதிகள் இடம் பெற்று வருவதுடன், இது தொடர்பில் அரச அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

