ஸ்ரீநகர்: இந்தியர்களை மணந்துகொண்டு இங்கே ஸ்லீப்பர் செல்களாக பாகிஸ்தானியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று பாஜக தெரிவித்துள்ளது.
பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த மக்கள் இந்தியாவிலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, அட்டாரி-வாகா எல்லையை மூடுவதாக அறிவித்த இந்தியா, பாகிஸ்தானியா்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்து, அவா்கள் வெளியேற உத்தரவிட்டது. இதையடுத்து, எல்லை வழியாக பாகிஸ்தானியா்கள் வெளியேறினா். கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் 7 நாள்களில் 911 பாகிஸ்தானியா்கள் எல்லை வழியாக வெளியேறிய நிலையில், 1,617 இந்தியா்கள் நாடு திரும்பினா்.
இதற்கான காலக்கெடு கடந்த புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வியாழக்கிழமை மூடப்பட்டது.

