Last Updated:
வீடுகளில் தண்ணீர் புகுந்த நிலையில் பொதுமக்களையும், செல்லப்பிராணிகளையும் மீட்புப்படையினர் மீட்டனர்.
ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல்லை உள்ளடக்கிய ஐபீரிய தீபகற்பத்தை தாக்கிய லியோ புயலால் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் கடந்த வாரம் வீசிய கிறிஸ்டின் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள்வதற்குள்ளாகவே, தற்போது லியோ புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் அண்டலூசியா (Andalusia) மாகாணத்தில் கொட்டிய கனமழையால் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
வீடுகளில் தண்ணீர் புகுந்த நிலையில் பொதுமக்களையும், செல்லப்பிராணிகளையும் மீட்புப்படையினர் மீட்டனர்.
ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் வெள்ள அபாயம் உள்ள ஆறுகள் மற்றும் அணைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஸ்பெயினின் அண்டை நாடான போர்ச்சுகல்லில் சாடோ ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால், அல்சேசர் டோ சால் உள்ளிட்ட நகரங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
Feb 05, 2026 10:12 PM IST


