கோலாலம்பூர்:
ஸ்தாபாக், ஜாலான் உசாஹவான் 6-இல் உள்ள போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் ஆம்புலன்ஸ் ஒன்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இன்று காலை சுமார் 8.10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்க மற்றும் விசாரணைத் துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் முகமட் ஜம்சூரி முகமட் ஈசா தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஒரு கார் ஓட்டுநர் (30 வயது), ஆம்புலன்ஸ் ஓட்டுநர் (34 வயது), ஆம்புலன்ஸ் பயணி (24 வயது), நான்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு சிறுமி (9 வயது) ஆகியோர் காயமடைந்தனர்.




