உலகக்கோப்பை டி20 தொடரை வென்ற இந்திய அணி நாடு திரும்பியுள்ள நிலையில், மும்பையில் வெற்றிக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. மும்பையின் நரிமன் பாயின்ட் முதல் வான்கிடே மைதானம் வரை லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இந்திய அணியை கொண்டாடி வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பினர். டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த வீரர்கள் அவரிடம் உலகக்கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டனர்.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்டது. 20 அணிகள் மோதிய இந்த போட்டியில் இந்திய அணி கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.


