ஆதித்யா மிட்டலின் மனைவியும் ஸ்டீல் நிறுவன ஜாம்பவான் லட்சுமி நிவாஸ் மிட்டலின் மருமகளுமான மேகா மிட்டல், தொழில் புத்திசாலித்தனத்திற்கும் தாராள குணத்திற்கும், தொண்டுள்ளத்திற்கும் அடையாளமாக திகழ்கிறார். உலகின் மிகவும் சக்திவாய்ந்த குடும்பத்தில் ஒருவராக இருந்தாலும், ஃபேஷன் துறைக்கும் மனிதாபிமான செயல்பாடுகளுக்கும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்துள்ளார் மேகா மிட்டல்.
ஹைதராபத்தில் மகேந்திர குமார் படோடியா என்பவரின் மகளாக பிறந்து வளர்ந்த மேகா மிட்டல், இன்று இவ்வளவு உயரம் எட்டுவதற்கு அவருடைய லட்சிய வேட்கையும் தீர்க்கமான தொலைநோக்கு பார்வையுமே காரணமாகும். ஒருநாள் இவர் உச்சங்களை தொடுவார் என்பதை தனது சிறுவயதிலேயே அனைவருக்கும் தெரியப்படுத்தினார் மேகா. தனது பள்ளிப் படிப்பை ஹைதராபாத் பொதுப் பள்ளியில் நிறைவு செய்த மேகா, கல்லூரி படிப்பிற்காக புகழ்பெற்ற வார்டான் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் சேர்ந்தார். 1997-ம் ஆண்டு பொருளியல் மற்றும் நிதி துறையில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.
மேகாவின் கேரியரை பார்த்தோமென்றால் பல துறைகளிலும் வேலை செய்துள்ளார். அவருக்கு பலவற்றின் மீதும் ஆர்வமும், திறமையும் இருப்பதையே இது காண்பிக்கிறது. படிப்பை முடித்ததும் உடனடியாக உலகளாவிய முதலீட்டு வங்கித் துறையில் பிரபலமாக இருக்கும் Goldman Sachs நிறுவனத்தில் முதலீட்டு ஆய்வாளராக பணியில் சேர்ந்தார் மேகா. இங்கு சில காலமே பணி புரிந்தாலும் அதற்குள் உலகளாவிய நிதிச் செயல்பாடுகள் குறித்து பல விஷயங்களை கற்றுக் கொண்டார். அவருடைய எதிர்கால தொழில் ஆசைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ஜெர்மனியின் ஆடம்பர ஃபேஷன் நிறுவனமான Escada-வின் மேலாண்மை இயக்குனராகவும் மேகா பணியாற்றியுள்ளார். Goldman Sachs நிறுவனத்தில் ஒரு வருடம் மட்டுமே பணியாற்றினார் மேகா. இவருடைய தந்தை மகேந்திர குமார் படோடியா GTN இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக தலைவர், மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பில் இருந்தார். இந்நிறுவனம் தான் இந்தியாவில் பருத்தி நூலை தயாரித்து விற்பனை செய்து வந்தது. நடுத்தரமான, தரமான மற்றும் அதிக தரமுள்ள என மூன்று வகைகளில் இந்நிறுவனம் பருத்தி துணிகளை விற்பனை செய்தது.
Also read |
சிறு வயதில் வீடு வீடாக பினாயில் விற்றவர், இன்று வளைகுடா நாட்டின் மசாலா கிங்; யார் இந்த தனஞ்சய் தாதர்?
மேகாவும் ஆதித்யா மிட்டலும் ஒன்றாக இணைந்து சமூக பிரச்சனைகளை தீர்க்க UNICEF அமைப்போடு கை கோர்த்தனர். சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதில் எந்தளவிற்கு இவர்கள் இருவரும் முனைப்போடு இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை. ஆதாரப்பூர்வமாக கொள்கை திட்டங்களை வகுக்கவும் குழந்தை நலம் மீது தாங்கள் உண்மையாகவே அக்கறை கொண்டுள்ளோம் என்பதை உணர்த்தவும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து நாடு முழுவதும் முதல்முறையாக கணக்கெடுப்பதற்கு தேவைப்படும் நிதி உதவியை இவர்கள் வழங்கினர். தங்கள் நன்கொடை செயல்பாடுகள் மூலம் வசதி வாய்ப்பற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதே இவரின் ஆசை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…