திருமண உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம் திறுத்திட்டாங்க, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றனர், ஆனால் 50 நாளாக குறைந்துவிட்டது. இது தான் திமுக லட்சணம். சம்பளமும் முழுமையாகக் கிடைக்கவில்லை, நாங்க டெல்லிக்குப் போய் அமைச்சரை பார்த்து பேசியபோது முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் சொன்னார். ஆனாலும், நாங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் 2,999 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு. அதையும் கேட்டுப்பெற முடியாத அரசு திமுக. 39 எம்.பிக்களும் பெஞ்சை தேய்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

