• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு தர்மேந்திர பிரதான் மறுப்பு; தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை பகிர்ந்தார் | Dharmendra Pradhan claims Tamil Nadu agreed to sign MoU on PM-SHRI schools

GenevaTimes by GenevaTimes
March 12, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு தர்மேந்திர பிரதான் மறுப்பு; தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை பகிர்ந்தார் | Dharmendra Pradhan claims Tamil Nadu agreed to sign MoU on PM-SHRI schools
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பு​திய தேசிய கல்விக் கொள்கை தொடர்​பாக திமுக மற்​றும் பாஜக கூட்​டணி எம்​.பி.க்​கள் இடையே கடும் மோதல் எழுந்​துள்​ளது. இந்த நிலை​யில், பிஎம்-ஸ்ரீ திட்​டத்தை அமல்​படுத்​து​வது தொடர்​பாக தமிழ்​நாடு கல்வி துறை அனுப்பிய ஒப்​புதல் கடிதத்தை மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்​ளார்.

இதுகுறித்து தர்​மேந்​திர பிர​தான் நாடாளு​மன்​றத்​தில் நேற்று பேசி​ய​தாவது: பிஎம்-ஸ்ரீ பள்​ளி​களை அமைப்​ப​தற்கு தமிழ்​நாடு ஒப்​புதல் அளித்​தது தொடர்​பாக நாடாளு​மன்​றத்தை நான் தவறாக வழிநடத்​தி​ய​தாக திமுக நாடாளு​மன்ற உறுப்​பினர்​களும், முதல்வர் ஸ்டா​லினும் என்​மீது குற்​றச்​சாட்டை சுமத்​தி​யிருந்​தனர். நாடாளு​மன்​றத்​தில் தெரி​வித்த கருத்​தில் நான் உறு​தி​யாக உள்​ளேன். கடந்த 2024-ம்​ ஆண்டு மார்ச் 15 தேதி​யிட்டு தமிழ்​நாடு பள்​ளிக்​கல்​வித்​துறை அனுப்​பிய ஒப்​புதல் கடிதத்தை பகிர்ந்து கொள்​கிறேன். ஒப்​புதல் தெரி​வித்​து​விட்டு பின்​னர் மறுப்பு தெரி​விப்​பது ஏன்?

திமுக நாடாளு​மன்ற உறுப்​பினர்​களும், முதல்வர் ஸ்டா​லினும் எவ்​வளவு பொய்​களை அடுக்​கி​னாலும் உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். தமிழ்​நாட்டு மக்​களின் ஏராள​மான பிரச்​சினை​களுக்கு திமுக தீர்வு காணவேண்​டி​யுள்​ளது. அதனை திசை திருப்​பும் உத்​தி​யாகவே மொழிகுறித்த பிரச்​சினையை அது கையில் எடுத்​துள்​ளது. தேசிய கல்விக் கொள்கை குறித்​த நிலைப்​பாட்​டில் ஏற்​பட்​டுள்ள இந்த திடீர் மாற்​றம் நிச்​ச​யம் அரசி​யல் லாபங்​களுக்​காக​வும், அதன் அரசி​யல் எதிர்​காலத்தை மீட்​டெடுப்​ப​தற்​காகவும் மட்​டும்​தான். திமுக அரசின் இந்த பிற்​போக்கு அரசி​யல், தமிழக மாணவர்​களின் வள மான எதிர்​காலத்​துக்கு மிகப்​பெரிய தீங்கு விளை​விப்​ப​தாக அமை​யும்.

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அரசி​யல் கண்​ணோட்​டத்​துடன் பார்க்க வேண்​டாம் என முதல்​வர் ஸ்டா​லினை அன்​புடன் கேட்டுக்​கொள்​கிறேன். அரசி​யல் லாபத்தை தவிர்த்து தமிழகத்​தில் உள்ள நமது குழந்​தைகள் நலனுக்கு முன்​னுரிமை தர வேண்​டு​கிறேன். இவ்​வாறு பிர​தான் பேசி​னார். இதனிடையே, தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘யுடிஐஎஸ்இ+ தரவுகளின் படி, 2018-19-ல் 65.87 லட்​ச​மாக இருந்த தமிழ்வழி மாணவர் சேர்க்கை 2023-24-ல் 46.83 லட்​ச​மாக குறைந்​துள்​ளது. ஐந்து ஆண்​டு​களில் 19.05 லட்​சத்​துக்​கும் அதி​க​மான மாணவர்​கள் தமிழ் வழி கல்​வியி​லில் இருந்து குறைந்​துள்​ளனர். 65 சதவீத மாணவர்​கள் இப்​போது ஆங்​கில வழி பள்​ளி​களில் மட்​டுமே உள்​ளனர். அதேசம​யம், தமிழ் வழி மாணவர் சேர்க்கை 54% (2018-19)-லிருந்து 36% (2023-24)-ஆக குறைந்​துள்​ளது.

அரசு பள்​ளி​களில் ஐந்தே ஆண்​டு​களில் ஆங்​கில வழி மாணவர் சேர்க்கை 3.4 லட்​சத்​திலிருந்து 17.7 லட்​ச​மாக 5 மடங்கு அதி​கரித்​துள்​ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 7.3 லட்சத்திலிருந்து குறைந்துள்ளது. இந்த புள்ளவிவரங்கள் ஆழமான மாற்றம் மற்றும் உண்மையான நிலையை பிரதிபலிக்கிறது. தமிழ் மீடியத்தில் சேர்வோர் எண்ணிக்கைதொடர்ந்து குறைந்து வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

அன்​பில் மகேஸ் விளக்​கம்: இதனிடையே, தேசிய கல்விக் கொள்​கையை தமிழக அரசு ஒரு​போதும் ஏற்​க​வில்லை என்று தமிழக அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தவறான தகவல்​களை பரப்​புவ​தால் உண்​மை​கள் மாறி​வி​டாது. தேசிய கல்விக் கொள்​கையை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வரு​கிறது.எங்​கள் நிலைப்​பாட்​டில் திடீர் மாற்​றம் இல்​லை. தமிழக அரசின் 2024 மார்ச் 15-ம் தேதி​யிட்ட கடித​மும் தேசிய கல்விக் கொள்​கையை ஏற்​ப​தாக இல்​லை. மாணவர்​களுக்கு நன்மை பயக்​கும்​போது மட்​டுமே மத்​திய அரசின் திட்​டங்​களை ஏற்​கிறோம். அதற்​காக அனைத்து திட்​டங்​களை​யும் கண்​மூடித்​தன​மாக ஏற்க முடி​யாது. அந்த கடிதத்​தில், ஒரு குழு அமைக்​கப்​பட்டு அதன்​பரிந்​துரைகளின்​படி திட்​டத்​தில் சேரு​வது குறித்து முடிவு செய்​வோம் என்று தெளி​வாகக் கூறப்​பட்​டுள்​ளது.

மேலும், தேசிய கல்விக் கொள்​கையை திணித்து தமிழகத்​தின் கலாச்​சா​ரத்​தை​யும், மரபை​யும் சிதைக்க முயற்​சிப்​பவர்​கள்​தான் தற்​போது அரசி​யல் செய்​கின்​றனர். தமிழக குழந்​தைகள் நலனுக்கு எது சிறந்​தது என்​பதை தேர்ந்​தெடுக்​கும் உரிமையை அங்​கீகரித்து ஆதரிப்​ப​தன் மூலம் நீங்​கள் தமிழகத்​தின் எதிர்​காலத்​துக்​கும் சிறந்த சேவையை செய்​கிறீர்​கள். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

முன்​ன​தாக, நேற்று முன்​தினம் மக்​களவை​யில் பேசிய மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தேசிய கல்விக் கொள்கை விவ​காரத்​தில் திமுக வேண்​டுமென்றே அரசி​யல் செய்​வ​தாக கடுமை​யாக விமர்​சித்திருந்தார். அப்​போது அவர் பயன்​படுத்​திய சில வார்த்​தைகளுக்கு திமுக எம்​.பி.க்​கள் கடும் ஆட்​சேபம் தெரி​வித்​தனர். இந்த விவ​காரம் தொடர்​பாக அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் மீது கனி​மொழி உரிமை மீறல் நோட்​டீஸும் வழங்​கி​னார். இதையடுத்​து, அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பேசும்​போது, ‘‘அந்த வார்த்​தைகளை திரும்ப பெற்​றுக் கொள்​கிறேன்’’ என்​றார். இதைத் தொடர்ந்​து, அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் குறிப்​பிட்ட வார்த்​தைகள் அவைக் குறிப்​பில் இருந்து நீக்​கப்​படு​வ​தாக மக்​களவை தலை​வர் ஓம் பிர்லா அறி​வித்​தார்.



Read More

Previous Post

கச்சதீவு திருவிழா: 5 நாட்கள் மீன்பிடிக்க செல்ல தடை

Next Post

“வெற்றியை அடைய எதையும் செய்ய தயார்” – ரோஹித் சர்மா உறுதி | Ready to do anything to achieve success – Rohit Sharma

Next Post
“வெற்றியை அடைய எதையும் செய்ய தயார்” – ரோஹித் சர்மா உறுதி | Ready to do anything to achieve success – Rohit Sharma

"வெற்றியை அடைய எதையும் செய்ய தயார்” - ரோஹித் சர்மா உறுதி | Ready to do anything to achieve success - Rohit Sharma

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin