• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்த எம்எஸ் தோனி… எந்த நிறுவனத்தில் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
July 23, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்த எம்எஸ் தோனி… எந்த நிறுவனத்தில் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிரிக்கெட்டை தாண்டி மகேந்திர சிங் தோனி ஆட்டோமொபைல் வாகனங்கள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதன் காரணமாக ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகிறார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் அலுவலகம், ப்ளூஸ் மார்ட்டின் ரூ.200 கோடி முதலீட்டை ஈட்டும் நிதிச் சுற்றில் பங்கேற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ப்ளூ ஸ்மார்ட் நிறுவனம் ஓலா மற்றும் உபர் போன்ற டாக்ஸி சேவையை வழங்கி வருகிறது, ஆனால் இது எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வாடகை சேவைகளை வழங்கி வருகிறது.

விளம்பரம்

ஆட்டோமொபைல் துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் தோனியின் அடுத்த முதலீடு இதுவாகும். முன்னதாக எலெக்ட்ரிக் சைக்கிள் நிறுவனமான EMotorad மற்றும் யூஸ்டு கார் சில்லறை விற்பனையாளர் தளமான Cars24 மற்றும் டிஜிட்டல் கடன் வழங்கும் தளமான Khatabook ஆகிய நிறுவனங்களில் தோனி முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூஸ்மார்ட்டில் முதலீடு செய்திருப்பது குறித்து தோனி கூறியதாவது, நகர்ப்புற போக்குவரத்தை மறுவடிவமைப்பு செய்யும் ப்ளூஸ்மார்ட்டின் முயற்சிகளை ஆதரிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார். அறிக்கையின்படி, ப்ரீ சீரிஸ் நிதியுதவி சுற்று மூலம் புளூ ஸ்மார்ட் சுமார் 250 மில்லியன் டாலர்கள் அல்லது ரூ.2,089 கோடி முதலீடுகளை தற்போது வரை ஈர்த்துள்ளது.

விளம்பரம்

மேலும், ப்ளூஸ்மார்ட் நிறுவனத்தில், ReNew நிறுவனத்தின் தலைவர் சுமன் சின்ஹா, ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான responsability இன்வெஸ்ட்மென்ட் ஏஜி போன்ற புதிய முதலீட்டாளர்கள் தற்போது முதலீடு செய்துள்ளனர். அன்மோல் சிங் ஜக்கி, புனித் கே கோயல் மற்றும் புனித் சிங் ஜக்கி ஆகியோர் ஏற்கனவே இந்த நிறுவனத்தில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனத்தின் நிறுவனர்களாவார்கள்.

இதையும் படிக்க:
Union Budget 2024-25 : புதிய வருமான வரித் திட்டத்தில் நிரந்தரக் கழிவு ரூ.75 ஆயிரமாக உயர்வு – உங்களுக்கு எவ்வளவு மிச்சம் தெரியுமா?

விளம்பரம்

இந்தியாவில் தற்போதைக்கு புது டெல்லி, குருகிராம், நொய்டா மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டு வாடகை சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2024 ஜூன் மாதத்தில் தனது முதல் வெளிநாட்டு சேவையை துபாயில் ப்ளூஸ்மார்ட் அறிமுகப்படுத்தியிருந்தது. டாக்ஸி சேவைக்காக துபாயில் லக்சரி தரத்திலான வாகனங்களை ப்ளூஸ்மார்ட் பயன்படுத்துகிறது. மேலும், இந்த வருட இறுதிக்குள் மும்பையில் தனது சேவைகளை அறிமுகப்படுத்துவதில் ப்ளூஸ்மார்ட் தீவிரமாக உள்ளது.

இதையும் படிக்க:
Budget – Gold price | சுங்க வரி குறைப்பு… தங்கம் விலை எவ்வளவு வரை குறையும் தெரியுமா? நகை வியாபாரிகள் சங்க தலைவர் விளக்கம்!

விளம்பரம்

70 வாகனங்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 7,500 வாகனங்களுடன் இயங்கி வருகிறது. அது மட்டும் இன்றி இந்த நிறுவனம் 50 இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது. தற்போதைய சூழலில் இந்த நிறுவனம் ஓலா,ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களோடு போட்டியிட்டு வருகிறது.

.

Read More

Previous Post

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! – SG Tamilan

Next Post

2024-25 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்: வருமான வரி விதிப்பு விகிதத்தில் மாற்றம்  | Nirmala Sitharaman Presents Budget in Lok Sabha

Next Post
2024-25 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்: வருமான வரி விதிப்பு விகிதத்தில் மாற்றம்  | Nirmala Sitharaman Presents Budget in Lok Sabha

2024-25 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்: வருமான வரி விதிப்பு விகிதத்தில் மாற்றம்  | Nirmala Sitharaman Presents Budget in Lok Sabha

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin