கொழும்பு ஸாஹிரா கல்லூரி ரக்பி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒழுங்கு செய்துள்ள பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டி நாளை (2) மற்றும் நாளை மறுதினம் (3) கொழும்பு, குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் நடைப்பெறுள்ளது.
இதில் ஸாஹிரா கல்லூரியுடன் றோயல் கல்லூரி, புனித பீட்டர்ஸ் கல்லூரி, திரித்துவ கல்லூரி, வெஸ்லி கல்லூரி, இசிபத்தான கல்லூரி, கிங்ஸ்வுட் கல்லூரி, தர்மராஜா கல்லூரி, ஸ்ரீ சுமங்கல கல்லூரி, புனித அலோசியஸ் கல்லூரி, புனித தோமஸ் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, மகாநாம கல்லூரி, டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, மலியாதேவ கல்லூரி மற்றும் லும்பினி கல்லூரி என மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தத் தொடர் ஆசிய ரக்பி, இலங்கை ரக்பி மற்றும் இலங்கை பாடசாலை ரக்பி சம்மேளனத்துடன் இணைந்து நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post ஸாஹிரா நூற்றாண்டு ரக்பி தொடர் நாளை ஆரம்பம் appeared first on Thinakaran.