பந்தை நோக்கி கைரவிரலை காட்டி பேச்சு
இதன் பின்னர் லக்னோ அணி கேப்டன் பந்த் பக்கம் சென்ற கோயங்கா, கைகளை அசைத்தவாறு பரபரப்பான விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ரிஷப் பந்தை நோக்கி தனது கைவிரல்களை காட்டி பேசினார். ஏற்கனவே முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக லக்னோ கடைசி ஓவரில் தோல்வி அடைத்தபோது இதுபோல் தான் உரையாடினார் கோயங்கா. கடந்த சீசனில் இதுபோல் தான் லக்னோ அணி ஒரு போட்டியில் தோல்வியுற்றபோது, அணி கேப்டனாக இருந்த கேஎல் ராகுலிடம், மைதானத்தில் வைத்தே பலரது முன்னிலையில் காட்டமாக உரையாடினார். அப்போது கேஎல் ராகுலுக்கு ஆதரவாக கருத்துகள் குவிந்தன.

