ஷேன் வார்னே அருகே இருந்த பாட்டில்
அவர் இறந்த பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தாய்லாந்தில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், வார்ன் ‘இயற்கை காரணங்களால்’ இறந்தார் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், கடந்த மார்ச் 30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மெயில் ஆன்லைனில் என்ற ஊடகத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, காமக்ரா எனப்படும் சூப்பர் ஸ்ட்ராங் செக்ஸ் போதைப்பொருள் பாட்டில் வார்னின் உடலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஜாம்பவானின் துயர மரணத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற ஊகத்துக்கு வழிவகுத்தது, மேலும் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி அதை அறையிலிருந்து அகற்ற உத்தரவிட்டார் மற்றும் காவல்துறை அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

