Last Updated:
2024-25 சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது ஷுப்மன் கில், வீராங்கனை விருது ஸ்மிருதி மந்தனா, அறிமுக வீரர் விருது ஹர்ஷித் ராணா. ரோஜர் பின்னி, ராகுல் டிராவிட், மிதாலி ராஜ் வாழ்நாள் சாதனையாளர் விருது.
2024-25 ஆண்டுக்கான இந்தியாவைச் சேர்ந்த சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையருக்கான விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன.
ஒவ்வோர் ஆண்டும், இந்தியாவைச் சேர்ந்த சிறந்த சீனியர், ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர், வீராங்கனையருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
அவ்வகையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனையரின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி சிறந்த வீரராக இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுபோல், 2024-2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய சர்வதேச கிரிக்கெட் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக வீரர் விருது, கிரிக்கெட் போட்டியின் 3 வடிவங்களிலும் சிறப்பான அறிமுகம் கண்ட ஹர்ஷித் ராணாவுக்கு வழங்கப்படவுள்ளது.
1983ல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி, ஜாம்பவான் பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் இருவருக்கும் கலோனல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீராங்கனை மிதாலி ராஜுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி பிசிசிஐ கவுரவிக்கவுள்ளது. இந்த விருதுகள் டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகின்றன.
Mar 15, 2026 10:12 AM IST


