• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஷுப்மன் கில் 162 பந்துகளில் 161 ரன்கள் விளாசல்: இங்கிலாந்து அணிக்கு 536 ரன்கள் இலக்கு | Shubman Gill breaks records broken during IND vs ENG 2nd Test

GenevaTimes by GenevaTimes
July 5, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஷுப்மன் கில் 162 பந்துகளில் 161 ரன்கள் விளாசல்: இங்கிலாந்து அணிக்கு 536 ரன்கள் இலக்கு | Shubman Gill breaks records broken during IND vs ENG 2nd Test
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பர்​மிங்​காம்: 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கிலாந்து அணிக்கு 536 ரன்​களை இலக்​காக நிர்​ண​யித்​தது இந்​திய அணி. கேப்​டன் ஷுப்​மன் கில் 2-வது இன்​னிங்​ஸில் 162 பந்​துகளில் 161 ரன்​கள் விளாசி அசத்​தி​னார்.

பர்​மிங்​காமில் உள்ள எட்​ஜ்​பாஸ்​டன் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 587 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஷுப்​மன் கில் 269 ரன்​கள் விளாசி​னார். இதையடுத்து விளை​யாடிய இங்​கிலாந்து அணி 3-வது நாள் ஆட்​டத்​தில் 89.3 ஓவர்​களில் 407 ரன்​கள் எடுத்து முதல் இன்​னிங்​ஸில் ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜேமி ஸ்மித் 184, ஹாரி புரூக் 158 ரன்​கள் விளாசினர். இந்​திய அணி தரப்​பில் முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

180 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 13 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 64 ரன்​கள் எடுத்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 28 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார். கே.எல்​.​ராகுல் 28, கருண் நாயர் 7 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். நேற்று 4-வது நாள் ஆட்​டத்தை இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது. கருண் நாயர் 46 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 26 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரைடன் கார்ஸ் பந்​தில் விக்​கெட் கீப்​பர் ஜேமி ஸ்மித்​திடம் கேட்ச் கொடுத்து வெளி​யேறி​னார்.

இதையடுத்து ஷுப்​மன் கில் களமிறங்​கி​னார். தனது 18-வது அரை சதத்தை கடந்த கே.எல்​.​ராகுல் 84 பந்​துகளில், 10 பவுண்​டரி​களு​டன் 55 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோஷ் டங்க் பந்​தில் போல்​டா​னார். இதையடுத்து களமிறங்​கிய ரிஷப் பந்த், ஷுப்​மன் கில்​லுடன் இணைந்து தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்​டார். ஜோஷ் டங்க் வீசிய 30, 32 மற்​றும் 44-வது ஓவர்​களில் சிக்​ஸர் விளாசி மிரட்​டி​னார் ரிஷப் பந்த். அதேவேளை​யில் ஷுப்​மன் கில், ஜோஷ் டங்க் வீசிய 40 மற்​றும் 42-வது ஓவர்​களில் சிக்​ஸர் விளாசி​னார்.

தனது 16-வது அரை சதத்தை கடந்த ரிஷப் பந்த் 58 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஷோயிப் பஷிர் பந்தை விளாச முயன்ற போது லாங் ஆஃப் திசை​யில் பென் டக்​கெட்​டிடம் கேட்ச் ஆனது. ரிஷப் பந்த், ஷுப்​மன் கில் ஜோடி 4-வது விக்​கெட்​டுக்கு 110 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய ரவீந்​திர ஜடேஜா பொறுமை​யாக விளை​யாட மறு​முனை​யில் ஷுப்​மன் கில் அதிரடி​யாக விளை​யாடி​னார்.

மட்​டையை சுழற்​றிய ஷுப்​மன் கில் 129 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் தனது 8-வது சதத்தை விளாசி​னார். முதல் இன்​னிங்​ஸில் அவர், இரட்டை சதம் அடித்​திருந்​தார். இதன் மூலம் ஒரே டெஸ்ட் போட்​டி​யில் இரட்டை சதம் மற்​றும் சதம் விளாசிய 9-வது வீரர் என்ற பெரு​மை​யை​யும் இந்த சாதனையை நிகழ்த்​திய 2-வது இந்​திய வீரர் என்ற பெயரை​யும் பெற்​றார். இந்​திய வீரர்​களில் இதற்கு முன்​னர் சுனில் கவாஸ்​கர் 1971-ம் ஆண்டு மேற்கு இந்​தி​யத் தீவு​களில் நடை​பெற்ற டெஸ்ட் போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் 124 ரன்​களும், 2-வது இன்​னிங்​ஸில் 220 ரன்​களும் விளாசி​யிருந்​தார்.

சதம் விளாசிய பின்​னர் ரன் குவிக்​கும் வேகத்தை ஷுப்​மன் கில் அதி​கரித்​தார். 162 பந்​துகளில், 8 சிக்​ஸர்​கள், 13 பவுண்​டரி​களு​டன் 161 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஷோயிப் பஷிர் பந்​தில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்​ட​மிழந்​தார் ஷுப்​மன் கில். 5-வது விக்​கெட்​டுக்கு ஷுப்​மன் கில், ஜடேஜா ஜோடி 175 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து களமிறங்​கிய நித்​திஷ் குமார் ரெட்டி ஒரு ரன்​னில் ஜோ ரூட் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

83 ஓவர்​களில் இந்​திய அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 427 ரன்​கள் குவித்த நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​தது. ஜடேஜா 118 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 68 ரன்​களும், வாஷிங்​டன் சுந்​தர் 12 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். இதன் மூலம் இங்​கிலாந்து அணிக்கு 608 ரன்​களை இலக்​காக நிர்​ண​யித்​தது இந்​திய அணி. இமாலய இலக்​கை நோக்​கி இங்​கிலாந்​து அணி பேட்​டிங்​ செய்​யத்​ தொடங்கியது. இதுவரை 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களை இங்கிலாந்து எடுத்துள்ள நிலையில் வெற்றியை வசப்படுத்த 536 ரன்கள் அந்த அணிக்கு தேவை.



Read More

Previous Post

மருத்துவ கல்லூரி அங்கீகாரம் புதுப்பிக்க கோடிக்கணக்கில் லஞ்சம்: மடாதிபதி உட்பட 35 பேர் மீது சிபிஐ வழக்கு | Bribes in the millions to renew medical college accreditation

Next Post

அமெரிக்கா: தொடர் மழை, வெள்ளத்திற்கு 13 பேர் பலி | Makkal Osai

Next Post
அமெரிக்கா: தொடர் மழை, வெள்ளத்திற்கு 13 பேர் பலி | Makkal Osai

அமெரிக்கா: தொடர் மழை, வெள்ளத்திற்கு 13 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin