Last Updated:
பாதுகாப்பு பிரச்சனையில் ஈடுபடும் ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நடிகர் ஷாருக்கானை பார்ப்பதற்காக மைதானத்திற்குள் நுழைய முயன்ற ரசிகரைப் பிடித்து பாதுகாவலர்கள் அடி உதை கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், 22 ஆம் தேதி முதல் போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதியது.
இந்த போட்டியில், பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை வீழ்த்தியது. இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, விராட் கோலியின் ரசிகர் ஒருவர் பாதுகாப்பு வளையங்களை மீறி உள்ளே சென்று அவரது காலில் விழ முயன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போட்டி முடிந்த பின்னர் ஷாருக்கானின் ரசிகர் ஒருவர் பாதுகாப்பு கம்பிகள், தடுப்புகளை தாண்டி மைதானத்திற்குள் குதிக்க முயன்றார். அப்போது அவரை பிடித்த பாதுகாவலர்கள் அவருக்கு அடி உதை கொடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Kalesh over this guy tried to breach security to Meet SRK, got thrashed by Security Later pic.twitter.com/jgFqi2sCed
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 26, 2025
இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது போன்ற பாதுகாப்பு பிரச்சனையில் ஈடுபடும் ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி உள்ளனர்.
March 27, 2025 7:57 PM IST


