• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வைத்தியசாலையிலிருந்த சுரேஷ் சலே மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வைத்தியசாலையிலிருந்த சுரேஷ் சலே மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
வைத்தியசாலையிலிருந்த சுரேஷ் சலே மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, வைத்தியர்களின் அனுமதியை அடுத்து மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, சிகிச்சைகள் நிறைவடைந்த நிலையில் இன்று (06) பிற்பகல் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ் சலேவுக்குச் சிகிச்சையளித்த வைத்தியக் குழுவைச் சேர்ந்த 10 வைத்தியர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, கோட்டை நீதவான் முன்னதாக அழைப்பாணை விடுத்திருந்தார்.

குறித்த அழைப்பாணைக்கு அமைய நீதிமன்றில் முன்னிலையான வைத்தியர்கள் குழு, 100 நாட்களுக்கும் மேலாகச் சிகிச்சை பெற்றுவந்த சுரேஷ் சலே வைத்தியசாலையிலிருந்து வெளியேறக்கூடிய உடற்தகுதியுடன் இருப்பதாகக் கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

வைத்தியர்களின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சுரேஷ் சலே இன்றைய தினமே மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்படுவார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சுரேஷ் சலேவை, 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு முன்னர் அனுமதி பெறப்பட்டிருந்தது.

எனினும், தமக்கு மனிதநேயமற்ற சித்திரவதைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறி சுரேஷ் சலே சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து அவர் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சைகளைப் பெற்றுவந்தார்.

இதேவேளை, சுரேஷ் சலேவுக்கு எதிரான 90 நாள் தடுப்புக் காவல் கட்டளை காலம் நிறைவடைந்த பின்னர் அதனை மீண்டும் நீடிக்காமல், அவரை விளக்கமறியலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, அவரது மனைவி மனோரி சலே மற்றும் தாயார் ஆகியோர் ஜனாதிபதிக்குக் கடிதங்களை அனுப்பிவைத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read More

Previous Post

தேசிய நல்லிணக்க ஆணையம் அமைக்கும் திட்டம் ரத்து – Malaysiakini

Next Post

4 ஆண்டுக்கு பின் கம்பேக்.. இந்திய அணிக்குள் வந்த ஸ்விங் கிங்! 36 வயதிலும் அசராத புவனேஷ்வர் குமார் | Bhuvneshwar Kumar: Bhuvneshwar Kumar come back to Indian T20 team after 4 years in the New Zealand Tour

Next Post
4 ஆண்டுக்கு பின் கம்பேக்.. இந்திய அணிக்குள் வந்த ஸ்விங் கிங்! 36 வயதிலும் அசராத புவனேஷ்வர் குமார் | Bhuvneshwar Kumar: Bhuvneshwar Kumar come back to Indian T20 team after 4 years in the New Zealand Tour

4 ஆண்டுக்கு பின் கம்பேக்.. இந்திய அணிக்குள் வந்த ஸ்விங் கிங்! 36 வயதிலும் அசராத புவனேஷ்வர் குமார் | Bhuvneshwar Kumar: Bhuvneshwar Kumar come back to Indian T20 team after 4 years in the New Zealand Tour

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin