இதனிடையே சனிக்கிழமை பிஷ்னுபூர் மாவட்டத்தில் வேளாண் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாய்டோன் கிராமத்தில் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை குறிவைத்து அருகாமையிலுள்ள மலைப்பகுதியிலிருந்து ஆயுதப்படையினர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். அதில், அங்கிருந்த சாப்பம் சோஃபியா என்ற 27 வயது இளம்பெண்ணின் உடலில் குண்டு துளைத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதைக் கண்டதும் அலறியடித்துக்கொண்டு ஓடிய விவசாயிகள் பாதுகப்பான இடங்களுக்குச் சென்று தங்களைக் தற்காத்துக் கொண்டனர். இதன் காரணமாக குண்டடி பட்ட இளம்பெண்ணின் உடல், உழவு நிலத்திலேயே வெகு நேரம் கிடந்துள்ளது.

