Last Updated:
விவசாய நோக்கங்களுக்கான நீர் பயன்பாட்டுக்கு வரி விதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு ஜல் சக்தி அமைச்சகம் ஒரு விளக்கத்தை வெளியிட்டது.
விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் பயன்பாட்டிற்கு வரி விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறி சமீபத்தில் பல சோஷியல் மீடியா போஸ்ட்கள் வைரலாகின. இது சார்ந்த வைரல் பதிவுகள், விவசாயத்தை மட்டுமே சார்ந்து வாழும் விவசாய சமூகத்தினரிடையே கவலைகளை தூண்டி, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆனால், விவசாய நோக்கங்களுக்கான நீர் பயன்பாட்டுக்கு வரி விதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு ஜல் சக்தி அமைச்சகம் ஒரு விளக்கத்தை வெளியிட்டது. விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் பயன்பாட்டிற்கு வரி விதிக்கப்பட உள்ளது என்பன போன்ற அறிக்கைகள் “தவறானவை” என்று தெளிவாக விளக்கமளித்துள்ளது.
இந்த தகவல் குறித்த உண்மை நிலையை நேரடியாக வெளிப்படுத்தும் வகையில், அதிகாரப்பூர்வ PIB Fact Check அக்கவுண்ட் இந்தக் கூற்று தவறானது என்பதை உறுதிப்படுத்தியது. கூடவே ஜல் சக்தி அமைச்சகமும் இந்த விஷயத்தில் உண்மை என்ன என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், இத்தகைய வரி அல்லது பயனர் கட்டணம் எதுவும் மத்திய அரசால் கட்டாயமாக்கப்படவில்லை என்று மீண்டும் தெளிவுபடுத்தினார்.
ஜல் சக்தி அமைச்சகத்தின் கூற்றுப்படி, பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனாவின் (PMKSY) கீழ் செயல்படுத்தப்படும் M-CADWM திட்டத்தின் நவீனமயமாக்கல் சார்ந்த தவறான புரிதலில் இருந்து இந்த குழப்பம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த முன்னோடித் திட்டம் நீர்ப்பாசன செயல்திறனை மேம்படுத்துவது, சமமான நீர் விநியோகத்தை உறுதி செய்வது மற்றும் சிறந்த நீர் மேலாண்மைக்காக பிரஷரைஸ்ட் பைப்லைன் நெட்வொர்க்ஸ் அமைத்தல், IoT டிவைசஸ் மற்றும் SCADA சிஸ்டம்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் விவசாயிகள் தண்ணீர் பயன்பாட்டிற்காக பயனர் கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று இந்த திட்டத்தில் எந்த விதியும் இல்லை என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Several social media posts claim that the Union Government is planning to impose a tax on water usage for agricultural purposes #PIBFactCheck:
❌ This Claim is #Fake✅ Union Jal Shakti Minister @CRPaatil has clarified in a press conference that water usage for farming falls… pic.twitter.com/FqyT0VWAKd
— PIB Fact Check (@PIBFactCheck) June 27, 2025
அந்த அறிக்கையில், அமைச்சகம் ஒரு அரசியலமைப்பு விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளது. “விவசாயம்” மற்றும் “நீர்” இரண்டும் state subjects ஆகும் என குறிப்பிட்டுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் விவசாயத்திற்கான நீர் பயன்பாட்டுக் கட்டணங்களை வசூலிப்பது குறித்த எந்தவொரு முடிவும் மத்திய அரசை அல்ல, தனிப்பட்ட மாநில அரசுகளையே சார்ந்துள்ளது என்பதாகும். வாட்டர் யூஸர் அசோசியேஷன் அல்லது பிற அமைப்புகள் இறுதியில் கட்டணம் விதிக்க முடிவு செய்தால், அது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பப்படி இருக்கும், மத்திய உத்தரவின் காரணமாக அல்ல என்றும் ஜல்சக்தி அமைச்சகம் கூறியுள்ளது.
விவசாயிகளிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால், முக்கிய தகவல்களை சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யும் முன்பு அது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்துமாறு பொதுமக்களையும், ஊடகங்களையும் இந்த அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இது போன்ற தவறான தகவல் பரப்பப்படுவது விவசாய சமூகத்தின் நலன்களை பாதிக்கிறது, இது ஒரு முக்கிய கவலையாக உள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.
July 03, 2025 4:01 PM IST