வேல்ஸில் நேட்டோ மாநாடு – காணொளி
நேட்டோ தலைவர்கள் இங்கு பிரிட்டனில் வேல்ஸ் பகுதியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்திக்கிறார்கள்.
மிகவும் முக்கியமான தருணத்தில் நடக்கும் ஒரு முக்கியமான சந்திப்பாக இதனை நேட்டோவின் தலைமைச் செயலர் வர்ணித்திருக்கிறார்.
அதிகரித்துவருகின்ற யுக்ரெய்னிய நெருக்கடி, இராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாமிய அரசு அமைப்பினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல், ஆப்கானில் நேட்டோவின் பங்களிப்பு ஆகியவை உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து இந்தத் தலைவர்கள் ஆராயவுள்ளனர்.
இவை குறித்த பிபிசியின் காணொளி.