சிங்கப்பூரில் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் அல்லது குளறுபடிகளை கண்டால் இனி தைரியமாக புகார் கொடுக்கலாம்.
பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து புகார் கொடுக்கலாம் என்று மனிதவள அமைச்சகமே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் இது போன்ற புகார்கள் வெளிநாட்டு ஊழியர்களின் உயிர்களை காப்பாற்றலாம் என்று அமைச்சகம் நமக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இது போன்ற புகார்கள், குறைகளை கண்டறிந்து பாதுகாப்பை வலுப்படுத்த பேருதவியாக இருப்பதாக அது கூறியது.
கடந்த நவ. 17 அன்று இதுபோன்ற ஒரு புகார் அமைச்சகத்துக்கு கிடைத்துள்ளது, அதில் போர்க்லிப்ட்டில் வேலை பார்க்கும் ஊழியர் பாதுகாப்பு இல்லாமல் இருந்ததாக பொதுமக்களில் ஒருவர் புகைப்படம் எடுத்து அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார்.
இதனால் முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் அங்கு சென்ற அமைச்சகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்த முடிந்ததாக அது குறிப்பிட்டது.
அங்கு பாதுகாப்பு விதி மீறல்கள் கண்டறியப்பட்டதாகவும், மேலும் தேவையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பும் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என நிறுவனங்கள் முனைப்பு காட்டும், அதற்கு நாம் பலிகடா ஆகக்கூடாது.
விழிப்புடன் இருங்கள், பாதுகாப்பில் எனெக்கென்ன என்று இருக்க வேண்டாம். ஏனெனில் நம்மை நம்பி ஓர் குடும்பம் உள்ளது.
Read: “வாழ வேண்டிய வயசுங்க..” – சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த புதுக்கோட்டை இளைஞர் மின்னல் தாக்கி மரணம்
Read: சிங்கப்பூரில் பங்களாதேஷ் கட்டுமான ஊழியர் மரணம் – “அன்பாக பழகக்கூடியவர்” – கண்ணீரில் சக ஊழியர்கள்
கடமையைச் செய்ய தவறினால் இனி S$20,000 அபராதம் – சிங்கப்பூரில் நிறுவன இயக்குநர்களுக்கு புதிய திருத்த சட்டம்
PHOTO: Suhaimi Abdullah/NurPhoto/Getty Images

