Singapore Foreign Workers: தெங்கா வேலையிடத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர், தனது சக ஊழியரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவில்லை என்று விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.
வேலையிடத்தில் பணியில் இருந்த 23 வயதான திரு.பொன்ராமன் ஏழுமலை என்ற இந்திய ஊழியரை கவனிக்காத சக ஊழியர் லாரியை இயக்கினார், இதில்
லாரியில் மேல் இருந்த இயந்திரத்தில் அவர் சிக்கி மார்பு நசுங்கி உயிரிழந்தார் என்று கூறப்பட்டது.
சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வேலை… 3 லட்சத்தை ஏமாந்த தஞ்சை நபர்
இந்த சம்பவம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 2 அன்று, ஜூரோங் சாலையில் உள்ள தெங்கா ஒருங்கிணைந்த ரயில் மற்றும் பேருந்து பணிமனை வேலையிடத்தில் நடந்துள்ளது.
திரு.ஏழுமலை, TMC கான்கிரீட் பம்பிங் சர்வீசஸ் நிறுவனத்தில் உதவி பம்ப் ஆபரேட்டராகவும், அவரது சக ஊழியர் கான்கிரீட் பம்ப் லாரி ஓட்டுநராகவும் வேலையில் இருந்துள்ளனர்.
என்ன நடந்தது?
அன்று இரவு சுமார் 10.50 மணியளவில், கான்கிரீட் போடும் வேலையை முடித்துவிட்டு இருவரும் இயந்திரங்களை லாரியில் மீண்டும் ஏற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது திரு. ஏழுமலை சக ஊழியரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற தவறியதாகவும், இதனால் இயந்திரத்தில் சிக்கியதில் இந்த விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், அவர் ஃபாரர் பார்க் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு மார்பில் பலத்த காயமும், இரு நுரையீரல்களிலும் இரத்தப்போக்கு ஏற்பட்டதால், சுமார் 18 மணி நேரம் கழித்து அவர் மருத்துவமனையில் இறந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம்
இந்நிலையில், அவரது மரணத்தில் எந்த சதிச்செயலும் கண்டறியப்படவில்லை என்று விசாரணை அதிகாரி கண்டறிந்தார், மேலும் இது வேலையிடம் தொடர்பான விபத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க…
லிட்டில் இந்தியாவில் சாலையில் இ*றந்து கிடந்த ஆடவர்: யார் அவர்? – போலீசார் விசாரணை
சிங்கப்பூரில் இந்தியருக்கு 3 மாத சிறை தண்டனை
சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஊழியர் கைது
சிங்கப்பூரின் வளர்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு ஆக பெரியது – “நன்றி” சொல்ல சிறிய கொண்டாட்டம்

