[ad_1]
January 03, 20259:10 AM IST
Tamil Live Breaking News: திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!
வேலூர் திமுக எம்பியும், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மகனுமான கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. காட்பாடி காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் வேலூர் மாவட்டம் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளிகுப்பம் நடு மோட்டூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடந்து வருகிறது. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளரான பூஞ்சோலை சீனிவாசன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு ரூ.11 கோடி கொடுப்பதற்காக இவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருந்தாக பிடிக்கப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது மூன்று கார்களில் சுமார் ஆறு அதிகாரிகள் சிஆர்பிஎப் வீரர்களுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.