சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் சுமார் 900 தங்கும் விடுதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
தங்கும் விடுதிகளின் மேம்பாட்டு பணிகள் 5 ஆண்டுகள் நடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு தொடங்கும் இந்த பணிகள் 2030 வரை நடைபெறும்.
COVID-19 தொற்றுநோய் பரவலுக்கு பிறகு வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதியின் தரத்தை உயர்த்த இந்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
மேம்பாட்டு அம்சங்கள்
ஒவ்வொரு ஊழியருக்கும் தேவைப்படும் இடம் குறைந்தது 3.6 சதுர மீட்டராக பெரிதாக்கப்படும்.
மேலும் இதே இடம் 2040 ஆம் ஆண்டுக்குள் 4.2 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதிகளில் தங்கும் ஊழியர்களின் உச்சபட்ச வரம்பு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல, விடுதிகளில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் தனித்தனி கழிப்பறைகள் போன்றவை இந்த மேம்பாட்டு பணிகளில் இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன்பாகவே 14 தங்கும் விடுதிகளில் மேம்பாட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஊழியர்களின் ஒட்டுமொத்த நலனே இதில் முக்கியம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தாத லாரிகள்: பிடிபட்டால் தடை, வழக்கு… S$50,000 வரை அபராதம்
The post வேற லெவெலுக்கு மாறவுள்ள “வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகள்” – சிறப்பு வசதிகள் Upgrade appeared first on Tamil Daily Singapore.

