உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யா குமார் யாதவை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானி குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோக்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. மிகவும் த்ரில்லிங்காக நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது.
17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் இன்று வெஸ்ட் இண்டீசின் பார்படோஸில் இருந்து நாடு திரும்பினர். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த இந்திய அணி வீரர்கள் அவரிடம் வெற்றிக் கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றனர். வீரர்கள் ஒவ்வொரிடமும் பிரதமர் மோடி தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதையும் படிங்க – தன்னை ஏளனம் செய்த அதே மைதானத்தில் அரங்கை அதிர வைத்த ஹர்திக்… நெகிழ்ச்சி வீடியோ
இந்த நிகழ்வின்போது பிரதமருக்கும் இந்திய அணியின் ஜெர்ஸி NAMO என்ற பெயரில் 1 ஆம் எண்ணோடு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மும்பை வான்கிடே மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் திறந்தவெளி பேருந்தில் இந்திய அணி வீரர்கள் பேரணியாக சென்றனர்.
இந்நிலையில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானி தலைமையில் உலகக்கோப்பை ஹீரோக்களுக்கு பாராட்டு விழா மும்பையில் நடைபெற்றது.
“Tough Times Don’t Last, Tough People Do”
The Family Sangeet celebrations of Anant and Radhika took on the high emotional notes of national cricket fervor when Nita Ambani called on stage and the whole gathering applauded the World Cup winning heroes – Captain Rohit Sharma,… pic.twitter.com/RtTq2J364D
— Reliance Industries Limited (@RIL_Updates) July 6, 2024
ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதேபோன்று நீடா அம்பானியும் தனது குடும்பதினருடன் பங்கேற்று நெகிழ்ச்சிபட பேசினார். தற்போது இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
