கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸின் வட மேற்கில் ஜூன் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது.
இந்த காட்டுத்தீயால் 12 ஆயிரம் ஏக்கருக்கு மேல் எரிந்து நாசமானது.
மேலும் Hungry Valley பகுதியில் இருந்து 12000 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயை அணைப்பதற்காக 70 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு புல்டோஷர்களுடன் கூடிய ஆயுதம், குறைந்தது 400 தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீ லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வடமேற்கே சுமார் 96.5 கிலோமீட்டர் தொலைவில் கலிபோர்னியாவில் கோர்மனுக்கு தெற்கே பற்றி எரிகிறது.
மேலும் இந்த தீ சனிக்கிழமை மதியம் எரிய தொடங்கி தென்கிழக்கில் பிரமிட் ஏரியை நோக்கி பரவுவதாக தெரிவித்தனர்.
தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எடுத்து அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தது. தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் பல முயற்சி எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here
The post வேகமாக பரவி வரும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பாளர்கள்!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin