Last Updated:
உலகிலேயே மிகக் கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றான எபோலா வைரஸின் 3 வகைகளில் ஒன்றான பண்டிபுகியோ வைரஸ் (Bundibugyo Virus) தொற்று மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மிகத் தீவிரமாக பரவி வருகிறது.
காங்கோ, உகாண்டா உள்ளிட்ட மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில் அங்கு பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகக் கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றான எபோலா வைரஸின் 3 வகைகளில் ஒன்றான பண்டிபுகியோ வைரஸ் (Bundibugyo Virus) தொற்று மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக காங்கோ மற்றும் உகாண்டாவில் மட்டும் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் இத்தொற்று நோய்க்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் எபோலா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு, சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்த அவசர நிலை என்பது உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கை நிலை ஆகும். இருப்பினும் இது ‘பெருந்தொற்று அவசர நிலை’ என்ற தகுதியை எட்டவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.


