கோலாலம்பூர்:
இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகும் வடகிழக்கு பருவமழைக்கு தயாராகும் வகையில் நாடு முழுவதும் மொத்தம் 4,619 வெள்ள பாதிப்பு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று, நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை பிரிவின் இயக்குநர் டத்தோ கைருல் ஷாரில் இட்ரிஸ் தெரிவித்தார்.
அவற்றில் தீபகற்ப மலேசியாவில் 3,605 இடங்களும் சபாவில் 799 இடங்களும் சரவாக்கில் 201 இடங்களும் லாபுவானில் 14 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறைக்குக் குறையாமல் வெள்ளத்தை சந்தித்த பகுதிகளின் அடிப்படையில் இந்த வெள்ள இடம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.
அதே வேளையில் நாடு முழுவதும் உள்ள 254 சரிவான நிலப் பகுதிகளையும் நட்மா கண்காணித்து வருகிறது என்று கூறிய அவர், வெள்ளம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக 8 நிரந்தர நிவாரண மையம் கட்டப்பட்டுவருவதாகும், அதில் ஜோகூரில் உள்ள தாமான் கோத்தா ஜெயா, கோத்தா திங்கியில் உள்ள ஒரு நிரந்தர நிவாரண மையம் கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகவும், அதில் சுமார் 400 பேரை தங்கவைக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.


