தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிவேக வீதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது.
அந்தவகையில், வெள்ள நீரினால் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன பரிமாற்ற நுழைவு வீதிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் மூழ்கிய வீதி
நேற்று (13) வெலிபென்ன பரிமாற்றப் பகுதியில் உள்ள அளுத்கம – மத்துகம வீதி வெள்ளத்தில் மூழ்கியது.

இதனால் கொழும்பு நோக்கி நுழையும் வாயில், கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் வெளியேறும் வாயில் மற்றும் காலியிலிருந்து வரும் வாகனங்கள் வெளியேறும் வாயில் என்பன சொகுசு மற்றும் சிறிய ரக வாகனங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
தற்போது வெள்ள நீர் வடிந்துள்ள நிலையில், போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக வெலிபென்ன பரிமாற்ற நுழைவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இடியுடன் கூடிய மழை
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

