வெளிநாட்டு வாழ் இந்திய வாடிக்கையாளர்களுக்கு (NRI) பயனுள்ளதாக அமையும் வகையில் வெளிநாட்டு மொபைல் நம்பரை பயன்படுத்தி யூனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (UPI) மூலமாக இந்தியாவில் டிரான்ஸாக்ஷன் செய்யும் ஒரு புதிய சேவையை IDFC ஃபர்ஸ்ட் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
NRI/NRO வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த சேவை கிடைக்கிறது. மேலும், இதனை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை ஆஸ்திரேலியா, கனடா, ஃபிரான்ஸ், ஹாங்காங், மலேசியா, ஓமான், கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), யுனைட்டட் கிங்டம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்படுத்துவதற்கு கிடைக்கிறது.
ஜூன் 25, 2025ன் போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் NRE/NRO கஸ்டமர்கள் தங்களுடைய வெளிநாட்டு மொபைல் நம்பர்களைப் பயன்படுத்தி எந்தவிதமான UPI எனேபிள் செய்யப்பட்ட அப்ளிகேஷன்களுடன் (PhonePe, Google Pay, Paytm) வங்கிக் கணக்குகளை இணைக்கலாம் என்பதை IDFC வங்கி அறிவித்தது. உதாரணமாக, துபாயில் Etisalat அல்லது Du மொபைல் சிம் உடன் வாழும் NRIகள் IDFC ஃபர்ஸ்ட் வங்கியில் NRE/NRO அக்கவுண்ட் இருந்தால் இந்தியாவில் பேமெண்ட்களை செலுத்துவதற்கு Google Pay பயன்படுத்தலாம்.
NRI UPI பேமெண்ட்களின் அம்சங்கள்:
இந்திய சிம் கார்டு இல்லாமலேயே NRIகள் தங்களுடைய NRE/NRO அக்கவுண்டுகளை UPI உடன் இணைத்து பயன்படுத்தலாம்.
QR கோடுகள், UPI IDகள் அல்லது மொபைல் நம்பர்கள் பயன்படுத்தி உடனடியாக பில்களை செலுத்தலாம். பணத்தை பிறருக்கு அனுப்பவும் பெறவும் முடியும்.
UPI டிரான்ஸாக்ஷன்கள் செய்வதற்கு எந்த ஒரு கட்டணங்களும் வசூலிக்கப்படாது.
இந்தியாவிற்குள் UPIக்கு கிடைக்கும் அதே பாதுகாப்பு தரநிலைகள் இந்த சேவைக்கும் வழங்கப்படுகிறது.
வெளிநாட்டு பணத்தை மாற்றுவதற்கான கட்டணங்கள் ஏதும் இல்லாமலேயே வெளிநாட்டில் இருந்தும்கூட NRIகளால் UPI வசதியை பயன்படுத்த முடியும் என்று IDFC ஃபர்ஸ்ட் வங்கி விவரித்துள்ளது.
இந்த சேவையை பயன்படுத்த:
- IDFC ஃபர்ஸ்ட் வங்கி அப்ளிகேஷனுக்குள் லாகின் செய்து ‘Pay’ என்பதை கிளிக் செய்யவும்.
- வங்கிக் கணக்கை இணைக்கவும்.
- பேமெண்ட் செய்வதற்கு UPI ID-ஐ உருவாக்கவும்.
July 06, 2025 5:13 PM IST
வெளிநாட்டு SIM கார்டு வைத்தே இந்தியாவின் UPI யூஸ் பண்ணலாம்… அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்த வங்கி எது தெரியுமா…?